பி.ரஹ்மான் – கோவை மாவட்டம்.
கோவையில் மாட்டுப்பொங்கலை முன்னிட்டு அதிகாலையிலேயே மாட்டை குளிப்பாட்டி நடைபெறும் வழிபாடு.
கோவையில் பல்வேறு பகுதிகளில் மாட்டுப் பொங்கல்
இதற்கு முன்னர் மாட்டின் உரிமையாளர்கள் மாட்டை குளிப்பாட்டுவதுடன் மாட்டின் மீது மஞ்சள் தெளித்தும், நெற்றியில் குங்குமம் வைத்தும் வழிபட்டனர். அதேபோல மாட்டிற்கு புதிய மூக்கணாங்க கயிறையும் அணிவித்தனர். தொடர்ந்து மாட்டிற்கு சாமி மாலை அணிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மாட்டிற்கு பொங்கல் வைத்து வழிபாடு நடத்த உள்ளனர்.

இன்று ஒரு நாள் மட்டும் மாட்டை கவனிக்காமல் எப்பொழுதும் மாட்டின் மீது கவனம் செலுத்தி அன்பாய் இருக்க வேண்டுமென மாடு வளர்க்கும் இளம் பெண்கள் தெரிவித்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“