கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உடற்கூறாய்வு கூடத்திற்கு முன்பாக ரத்தம் கலந்த தண்ணீர் வெளியேறியதால் கடுமையான துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டது. மக்கள் அதிகம் நடமாடும் பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசியதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டது.
மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 20 உடல்கள் உடற்கூராய்வு செய்யப்படும் நிலையில் மாலையில் பணி முடிந்து மேடைகளை கழுவி விடும்போது வரும் நீர் என மருத்துவமனை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனை வளாகத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. ப்ளீச்சிங் பவுடரின் வெள்ளை நிறம் முழுவதும் ரத்த சிவப்பு நிறத்தில் மாறும் அளவிற்கு கழிவுநீர் வெளியேறியது.
இது தவிர மருத்துவமனை வளாகத்தில் ஒரு சில இடங்களில் கழிவு நர் வெளியேறும் சிக்கலும் உள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர்.
மருத்துவமனை முதல்வர் நிர்மலாவிடம் இதுகுறித்து கேட்ட பொழுது பிரச்சனையை சரி செய்ய பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கூறியிருப்பதாகவும், உரிய நடவடிக்கை விரைந்து எடுக்கப்படும் எனவும் தகவல் கூறினார்.
பொதுப்பணித்துறை அதிகாரிகள் கவனம் செலுத்தி இதற்கு நிரந்தர தீர்வினை உடனடியாக வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“