மழை வெள்ளத்தில் மூழ்கிய காய்கறிகள்... கோவை எம்.ஜி.ஆர் மார்க்கெட் வியாபாரிகள் கடும் அவதி

கோவை மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த கன மழை காரணமாக எம்.ஜி.ஆர் மார்க்கெட் பகுதியில் மழை நீர் பெரிதும் தேங்கி உள்ளது. மார்க்கெட்டின் பெரும் பகுதி குளம் போல மாறிய நிலையில், வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

author-image
WebDesk
New Update
Coimbatore MGR Market Vegetables drowned in rain flood water Tamil News

கோவை மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த கன மழை காரணமாக எம்.ஜி.ஆர் மார்க்கெட் பகுதியில் மழை நீர் பெரிதும் தேங்கி உள்ளது.

கோவை மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த கன மழை காரணமாக எம்.ஜி.ஆர் மார்க்கெட் பகுதியில் மழை நீர் பெரிதும் தேங்கி உள்ளது. மார்க்கெட்டின் பெரும் பகுதி குளம் போல மாறிய நிலையில், வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

Advertisment

கோவை மாவட்டத்திற்கு விடுக்கப்பட்டு உள்ள ரெட் அலர்ட் எச்சரிக்கையை அடுத்து நேற்று இரவு பெய்த கன மழை காரணமாக எம்.ஜி.ஆர் மார்க்கெட் பகுதியில் மழை நீர் பெரிதும் தேங்கி உள்ளது. மார்க்கெட்டின் பெரும் பகுதி குளம் போல மாறிய நிலையில், வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு இருந்த காய் கறிகள் மழை நீரில் மூழ்கி சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் பாதைகளில் நீர் தேங்கியதால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் மார்க்கெட்டுக்குள் செல்வதற்கே சிரமமாக உள்ளது. பலமுறை வியாபாரிகள் கோரிக்கை வைத்தும் மழை நீர் தேங்குவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுக்காததால்,  மார்க்கெட் பகுதி முழுவதுமே  சேரும், சகதியும் ஆக காட்சி அளிக்கிறது. வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மழை நீர் வடிகாலை சீரமைத்து நிலையான தீர்வு வழங்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக்  வலியுறுத்தி வருகின்றனர்.

Advertisment
Advertisements

Coimbatore

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: