Advertisment

3. 37 கோடி செலவில் இருதய பாதுகாப்பு மருந்து திட்டம்: கோவையில் விரைவில் தொடக்கம் - அமைச்சர் மா.சு தகவல்

இன்னும் 15 நாளில் 1021 மருத்துவர்களுக்கும் 980 மருந்து ஆளுநர்களுக்கும் என ஒரே நாளில் 2000 பேருக்கு முதல்வர் பணியானை வழங்குவார் என சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

author-image
WebDesk
New Update
Coimbatore: minister Ma. Subramanian recent press meet Tamil News

பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்.

Advertisment

கோவை அரசு மருத்துவமனையில் உள்நோயாளி பிரிவின் கட்டண அறை திறப்பு, விஷ முறிவு சிறப்பு மருத்துவ மாநில பயிற்சி மையம் திறப்பு ஆகியவற்றை திறந்து வைத்த சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அதில் அவர் கூறியது பின்வருமாறு:-

நிதி நிலை அறிக்கையில் 110 அறிவிப்பு அறிவிக்கப்பட்டது. மாரடைப்பால் ஏற்படும் உயிர்யிழப்பை தடுக்க இருதய பாதுகாப்பு மருந்து வழங்கும் நிகழ்வு நடைபெறுகிறது. கோவை மதுக்கரை மலுமிச்சம்பட்டி கிராமத்தில் இந்த திட்டம் துவங்கபடுகிறது. 3 கோடியே 37 லட்சத்தில் இந்த திட்டம் துவங்கப்பட்டுள்ளது.

பாம்பு கடி, நாய் கடியால் பாதிக்கப்படும் நபர்களுக்கு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை வழங்கப்படுகிறது. 30 ஆயிரம் செவிலியர்களுக்கு விஷக்கடிக்கான பயிற்சி கோவை அரசு மருத்துவ மனையில் வழங்கப்படுகிறது. மாநில அளவிலான மையமாக கோவை அரசு மருத்துவமனை உள்ளது.

publive-image

8713 துணை சுகாதார நிலையங்கள், 2206 ஆரம்ப சுகாதார நிலையங்கள் நகர்ப்புற சுகாதார நிலையங்களிலும் இருதய பாதுகாப்புக்கான மருந்து கையிருப்பு வைக்கப்படும். இருதய பாதுகாப்பு மருந்து வழங்கப்படும்.

கொரோனாவுக்கு பிறகு மாரடைப்பு அதிகரிக்கிறது என தெரிவித்தத்தில் பேரில் இருதய பாதுகாப்பு திட்டம் துவங்கப்பட்டுள்ளது. பாம்பு கடி, நாய் கடியால் 2 ஆண்டுக்கு முன்பு வரை வட்டார அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை அரசு, மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மட்டுமே மருந்துகள் இருந்தது.தற்போது ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்களில் என 2286 மையங்களில் பாம்பு கடிக்கும் நாய் கடிக்கும் மருந்துகள் இருப்பு உள்ளது.

இந்த நிலையில், அந்த மருந்தை எப்படி கையாள வேண்டும் என்பதற்கான பயிற்சி கோவை அரசு மருத்துவமனையில் செவிலியர்களுக்கு வழங்கப்படுகிறது.இது துவங்கப்பட்டுள்ளது. இதனால் கோவை அரசு மருத்துவமனை மாநில அளவிலான பயிற்சி மையமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 30000 செவிலியர்கள் இந்த பயிற்சியில் ஈடுபடுகின்றனர்.

கோவையில் 26 அறைகளுடன் கூடிய கட்டண சிகிச்சை அறை துவங்கப்பட்டுள்ளது. சேலம் கோவையில் நிதிநிலை அறிக்கையில் கட்டண வார்டு துவங்கப்படும் என அறிவித்து துவங்கப்பட்டுள்ளது. சூப்பர் டீலக்ஸ், டீலக்ஸ், சாதாரண வார்டு என வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஹெல்ப் டெஸ்க் உருவாகி வருகிறது. கோவை அரசு மருத்துவமனையில் நான்கு இடங்களில் ஹெல்ப் டெஸ்க் வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. கட்டணங்கள் சாதாரண வார்டுக்கு ரூபாய் ஆயிரம் , டீலக்ஸ்க்கு இரண்டாயிரம் ரூபாய், சூப்பர் டீலக்ஸ்க்கு மூன்றாயிரம் ரூபாய் என வசூலிக்கப்படுகிறது.

தமிழகத்தில் முதல்வர் நகராட்சி மாநகராட்சி என பிரித்து நகர்ப்புற நல வாழ்வு மையங்களை துவங்கி வைத்துள்ளார். 708 மையங்கள் துவங்கி வைக்க முடிவெடுத்து ஓராண்டில் 500 மையங்கள் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. கோவையில் 65 மையங்கள் திறக்க முடிவு எடுத்து 49 மையங்கள் முதல்வர் திறந்து வைத்துள்ளார்.

18 ஆக இருந்த அரசு தலைமை மருத்துவமனை கடந்த இரண்டு ஆண்டில் 25 மருத்துவமனையாக உயர்ந்துள்ளது. செவிலியர் பயிற்சி கல்லூரிகள் 6 ஆக இருந்த நிலையில் 11 புதிதாக துவங்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் காப்பீடு திட்டத்தில் கோவை பெரிய அளவில் பயன்பட்டு கொண்டு வருகிறது. காப்பீடு திட்டம் தொடர்பாக புகார்கள் இருந்தால் தகவல் தெரிவியுங்கள் நடவடிக்கை எடுக்கப்படும்.

publive-image

விபத்துகளின் போது உயிரிழப்புகளை தடுப்பதற்கு உலகத்திலேயே முதல் திட்டம் இன்னுயிர் காப்போம் திட்டம். இந்த திட்டத்தை சரியாக தெரிந்து கொள்ளாதவர்கள் குறை சொல்கின்றனர். உலக சுகாதார அமைப்பு (WHO) இந்த திட்டத்தை பாராட்டியுள்ளது. என்.எச்.எம் தனியாக செயல்படாது அது சுகாதாரத் துறையின் அங்கம்.

கடந்த இரண்டு ஆண்டில் டெங்கு மலேரியா போன்ற பாதிப்புகள் மாநகராட்சி நகராட்சிகளின் நடவடிக்கைகளால் குறைந்துள்ளது.

4300 காலி பணியிடங்கள் நிரப்பி உள்ளோம். 1021 மருத்துவர்களை நிரப்ப நேர்காணல் நடத்த அழைப்பு கொடுத்து 25 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர். இதன் பொது தேர்வுக்கான முடிவு 15 நாளில் வெளிவரும். அதன் பின் 1021 மருத்துவர்களும் 980 மருந்து ஆளுநர்களும் என ஒரே நாளில் 2000 பேருக்கு முதல்வர் பணியானை வழங்குவார். காலி பணியிடங்கள் நிரப்ப தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தேசிய அளவிலான வழிகாட்டுதலின்படி பணி நியமனங்கள் நடைபெறுகிறது.

இவ்வாறு சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Tamilnadu Coimbatore Ma Subramanian 2
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment