Advertisment

கோவையில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம்: ஸ்டாலின், ராகுல் கூட்டாக பிரசாரம்

நாடாளுமன்ற மக்களவை தேர்தலை ஒட்டி, கோவையில் ஏப்ரல் 12ம் தேதி அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கூட்டாக பிரசாரம் மேற்கொள்ள உள்ளனர்.

author-image
WebDesk
New Update
Coimbatore MK Stalin DMK and Rahul Gandhi INDIA Alliance meeting April 12 LS polls 2024 Tamil News

ராகுல் காந்தி 12 ஆம் தேதி தமிழகம் வருவது உறுதி செய்யப்பட்டுள்ள நிணலயில், அவர் கோவை, திருநெல்வேலியில் பிரச்சாரம் செய்ய உள்ளார்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Cm Mk Stalin | Rahul Gandhi | Coimbatore | Lok Sabha 2024: நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் ஏப்ரல் 19-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. 

Advertisment

இந்நிலையில், இந்த தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க கூட்டணியில் திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, கிருஷ்ணகிரி, கரூர், விருதுநகர், சிவகங்கை, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 9 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தமிழகம் முழுவதும் தொடர் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, தேசிய பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோரும் தமிழகம் வந்து பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளனர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அதற்கான பயண திட்டத்தை வகுத்து டெல்லி தலைமைக்கு அனுப்பி வைத்தது.

இந்நிலையில், ராகுல் காந்தி 12 ஆம் தேதி தமிழகம் வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. வருகிற 12 ஆம் தேதி தமிழகம் வரும் ராகுல் காந்தி, கோவை, திருநெல்வேலியில் பிரச்சாரம் செய்ய உள்ளார். அதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு காங்கிரஸ் மேற்கொண்டு வருகிறது. திருநெல்வேலியில் முதல்வர் ஸ்டாலினுடன் இணைந்து பிரச்சாரம் மேற்கொள்ள ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்று காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். 

இந்த நிலையில், கோவையில் 12-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் கூட்டாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார். மக்களவை தேர்தல் பரப்புரைக்காக 12-ம் தேதி ராகுல் தமிழ்நாடு வருகை தரும் நிலையில், இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கோவை செட்டிபாளையத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.

இதுகுறித்து தி.மு.க தலைமை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 2024 ஏப்ரல் 19 அன்று நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலையொட்டி, தமிழ்நாடு முதல்வரும், தி.மு.க தலைவரான மு.க.ஸ்டாலின், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, எம்.பி அவர்களுடன் இணைந்து ஏப்ரல் 12-ம் தேதியன்று, இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கோவை, செட்டிபாளையம் எல் அன்ட் டி பைபாஸ் ரோட்டில் நடைபெறும் தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார். 

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Cm Mk Stalin Rahul Gandhi Coimbatore Lok Sabha
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment