கோவை: தூய்மை பணியாளர்கள் முற்றுகை போராட்டம்... கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
Coimbatore cleanliness workers arrested, protesting in Collector's office Tamil News: கோவை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களின் சம்பள உயர்வை உடனே அமுல்படுத்த வேண்டும் என என மாவட்ட ஆட்சியர் முன்பு 300க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு அறிவித்த ரூ.721 தினசரி ஊதியமாக வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த ஊதிய உயர்வை உடனடியாக வழங்க வேண்டும் காப்பீடு பி.எப் இ.எஸ் ஜ முறைபடுத்த வேண்டும் எனவும், 15-ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் தூய்மை பணியாளர்களை நிரந்தர பணியாளர்களாக நியமிக்க வேண்டும், தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 300-க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களிடம் போலீசார் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். திடீரென ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதே போல கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களின் குறைந்தபட்ச கூலி வழங்க கோரி காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
Advertisment
Advertisements
இதையடுத்து அவர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தினர். ஆனால் அவர்கள் கலைந்து செல்லாமல் சாலையில் அமர்ந்து திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட 300 ஒப்பந்த தூய்மை பணியாளர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றிக்கொண்டு சென்றனர். அப்போது போலீசாருக்கும்- போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.