/indian-express-tamil/media/media_files/1AUnq9sudTKuraodEG94.jpg)
கோவையில் முன்னாள் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை.
Naam Tamilar Katchi | Coimbatore: சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கடந்த 2022 ஆம் ஆண்டு ஆயுதம் தயாரித்த வழக்கில் இரண்டு பட்டதாரி இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரிக்கும் இந்த வழக்கு தொடர்பாக இன்று அதிகாலை கோவை வந்தனர். அப்போது அதிகாரிகள் இருவர் வீட்டிலும் சோதனை நடத்தினர்.
தேசிய புலணாய்வு முகமை சோதனைக்குள்ளாக்கப்பட்டுள்ள காளப்பட்டி பகுதியை சேர்ந்த முருகன் என்பவர் திருச்சியை சேர்ந்தவர் என்பதும் கோவையில் கடந்த பத்து ஆண்டுகளாக வசித்து வரும் இவர் நாம் தமிழர் கட்சியின் குறுதி பாசறை உறுப்பினராக இருந்து கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்பு விலகி ஐ.டி.நிறுவனம் ஒன்றிற்காக வீட்டிலிருந்தே பணியாற்றி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதேபோல், ஆலாந்துறையை சேர்ந்த ரஞ்சித் என்பவர் தனியாக யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருவதும், கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு நாம் தமிழர் கட்சிலிருந்து நீக்கப்பட்டதாகவும் அக்கட்சி மண்டல செயலாளர் விளக்கம் அளித்துள்ளது. தொடர்ந்து காளப்பட்டி பகுதியில் உள்ள முருகன் என்பவரது வீட்டில் சோதனையை முடித்து வெளியேறினர்.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.