டெல்லி குடியரசு தின அணிவகுப்பு இந்தியாவின் குடியரசு தின கொண்டாட்டங்களைக் குறிக்கும் அணிவகுப்புகளில் மிக முக்கியமானது. இந்த அணிவகுப்பு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 அன்று புது டெல்லியில் உள்ள கர்தவ்யா பாதையில் நடைபெறுகிறது.
மூன்று நாட்கள் நடைபெறும் இந்திய குடியரசு தின விழாவின் முக்கிய ஈர்ப்பு இதுவாகும்.
அந்தவகையில் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி நடைபெற்ற அணிவகுப்பு நிகழ்வில் இராணுவம், கடற்படை மற்றும் விமானப் படையினர், என்சிசி மாணவர்கள் என பல படைப்பிரிவுகளில் இருந்து அவர்களின் இசைக்குழுக்கள் அணிவகுத்துச் சென்றது.

இதில் கோவையை சேர்ந்த என்சிசி மாணவர்கள் கலந்து கொண்டு அணிவகுப்பில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி தமிழகத்தில் முதல் இடத்தை பிடித்தனர்.
இந்த. மாணவர்களை கவுரவிக்கும் விதமாக கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரியில் பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து மாணவர்களுக்கு விருதுகள் மற்றும் ஊக்க பரிசு வழங்கப்பட்டது.
குரூப் கமாண்டர் கர்னல் பி விஎஸ் சிவா ராவ் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் பிரகாசன்,பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் கிரிராஜ் உள்ளிட்ட முப்படை வீரர்கள் கலந்து கொண்டனர்.
செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“