கோவையில் நீட் தேர்வு மாணவர்களின் விவரம் கசிவு: நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் கோரிக்கை

நீட் தேர்வு மாணவர்களின் விவரங்கள் கசியப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோவை காங்கிரஸ் கட்சியினர் புகார் மனு அளித்துள்ளனர்.

நீட் தேர்வு மாணவர்களின் விவரங்கள் கசியப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோவை காங்கிரஸ் கட்சியினர் புகார் மனு அளித்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
coimbatore: NEET students details leaked, Congress demands action Tamil News

NEET students details leaked in Coimbatore: Congress demands action Tamil News

பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்.

மருத்துவ நுழைவு தேர்வான நீட் தேர்விற்கு பல்வேறு மாணவர்கள் மத்திய அரசின் இணையதள பக்கத்தில் அவர்களது விவரங்களை பதிவேற்றம் செய்துள்ளனர். அந்த தகவல்கள் கசியப்பட்டு சில தனியார் பயிற்சி நிறுவனங்கள் சட்டத்திற்கு புறம்பாக பெறப்பட்டுள்ள தகவல்களைக் கொண்டு தனியார் இடைக்கால பயிற்சி நிறுவனங்களும் பெற்றோர்களை வணிகமயமாக்கும் எண்ணத்தோடு கட்டாயப்படுத்துகிறது. எனவே மத்திய அரசின் நீட் தேர்வு வலைதளபக்கத்தில் பதிவு செய்யப்பட்ட தகவல்களை சட்டத்திற்கு புறம்பாக கசிய செய்த அதிகாரிகள் மீதும் தனியார் பயிற்சி நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் கட்சியின் தேசிய செயலாளர் மயூரா ஜெயக்குமார் தலைமையில் காவல் ஆணையாளர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

Advertisment
publive-image

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மயூரா ஜெயக்குமார், மத்திய அரசினுடைய நீட் தேர்வு துறை இந்த ஆண்டு மிகப்பெரிய சைபர் ஊழலில் ஈடுபட்டுள்ளார்கள் என தெரிவித்தார். சமீப காலத்தில் நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் மத்திய அரசின் வலைத்தளத்தில் அவர்களுடைய தகவலை பதிவேற்றிய நிலையில் அந்த தனிப்பட்ட தகவல்களை நீட் தேர்வு துறை தனியார் பயிற்சி நிறுவனங்களுக்கு விட்டுள்ளதாகவும் மேலும் இது சட்டப்படி குற்றமாகும் எனவும் கூறினார்.

தற்போது இந்த தகவல்கள் கசியப்பட்டு தனியார் பயிற்சி நிறுவனங்கள் மாணவர்களின் பெற்றோர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கட்டாயப்படுத்தி அவர்களை மூளைச்சலவை செய்து தங்களுடைய நிறுவனங்களில் குழந்தைகளை படிக்க வைத்தால் தான் நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியும் என கூறி பணக் கொள்ளையில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டினார். எனவே மத்திய அரசின் நீட் தேர்வு துறை அதிகாரிகள் மீதும் தனியார் பயிற்சி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

Advertisment
Advertisements

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Tamilnadu Tamil Nadu Congress Neet Coimbatore Congress

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: