கோவையில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச தரத்திலான எக்ஸ்பிரிமெண்டா என்ற புதிய கலந்தாய்வு அறிவியல் மையம், மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
Advertisment
மறைந்த ஜிடி நாயுடு உருவாக்கிய ஜிடி நாயுடு அறக்கட்டளை சார்பில் எக்ஸ்பிரிமெண்டா என்ற புதிய கலந்தாய்வு அறிவியல் மையம் உருவாக்கப்பட்டுள்ளது.
சர்வதேச தரத்திற்கு இணையான இந்த மையத்தில் 120க்கும் மேற்பட்ட கலந்தாய்வு அறிவியல் பரிசோதனைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மாணவ, மாணவியர் அறிவியல் தொழில்நுட்பத்தை மிக எளிதாக அணுகி கற்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மையம், வரும் 28 ஆம் தேதி திறக்கப்பட உள்ளது.
மாணவர்கள் அறிவியலை பார்த்தும், தொட்டும் உணர்ந்து கற்றுக் கொள்ள முடியும் என்பதற்காக இந்த சர்வதேச தரத்திலான அறிவியல் பரிசோதனை மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவியல் மையம் வரும் மார்ச் ஒன்றாம் தேதி முதல் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்படுகிறது. காலை 9 மணி முதல் மாலை 6.30 மணி வரை மையத்துக்குள் சென்று மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அனைத்து அறிவியல் சார்ந்த விவரங்களையும் நேரில் பார்க்கலாம்.
மேலும் இந்த அறிவியல் மையத்திற்கு உள்ளே செல்ல சிறிய அளவு கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. அரசு பள்ளி மாணவ மாணவியர்கள் இலவசமாக இந்த அறிவியல் மையத்தை பார்வையிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே ஜெர்மனி உள்ளிட்ட சர்வதேச அளவிலான அறிவியல் கண்டுபிடிப்புகள் விளக்கம் கொடுக்கும் வகையிலான பல்வேறு கருவிகள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
ஜிடி அறிவியல் அருங்காட்சியகம், ஜிடி கார் மியூசியம் உள்ளிட்டவை செயல்பட்டு வரும் நிலையில் தற்போது எக்ஸ்பிரிமெண்ட் என்ற புதிய கலந்தாய்வு அறிவியல் மையமும் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“