/indian-express-tamil/media/media_files/2024/12/25/UzVmlLunh6WMeqisCKax.jpg)
கோவை மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிலை ஒன்று, பலரது கவனத்தையும் ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது.
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, வெளிநாடுகளுக்கு இணையாக நகரை அழகுபடுத்தும் வகையில் சாலைகளில் எல்.இ.டி விளக்குகள், லண்டன் க்ளாக் டவர், ரேஸ்கோர்ஸ் நடைபாதை என பல்வேறு பணிகள் நடந்து முடிந்துள்ளன.
இதேபோல், கடந்த சில தினங்களுக்கு முன்பு ரேஸ் கோர்ஸ், சுங்கம் ரவுண்டானா போன்ற பகுதிகளில் வைக்கப்பட்ட வெண்கல குதிரை சிலை, உலக உருண்டை, தமிழ் பாரம்பரிய காளை மாடுகள் சிலை ஆகியவை பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன.
இந்நிலையில், வடகோவை சிந்தாமணி ரவுண்டானாவில் உலக உருண்டையை மர மனிதன் தாங்கி நிற்பதை போல சிலை நிறுவப்பட்டு உள்ளது.
இதற்கான திறப்பு விழாவில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார், மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்னர்.
மரங்கள் நடுவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி - பி.ரஹ்மான்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.