‘தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி திட்டம்’ – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Tamil Nadu health minister tells private hospitals to Use CSR funds to vaccinate public free of cost Tamil News: தனியார் மருத்துவமனைகளில் கார்ப்பரேட் சமூக பொறுப்புணர்வு (சி.எஸ்.ஆர்) நிதியைப் பயன்படுத்தி பொதுமக்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடும் திட்டம் கோவை மாவட்டத்தில் விரைவில் தொடங்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Tamilnadu news in tamil: No death due to lack of oxygen in TN says Ma Subramanian

COIMBATORE news in tamil: கோயம்புத்தூர் அவிநாசி சாலையில் உள்ள கே.எம்.சி.ஹெச் தனியார் மருத்துவமனையில், கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பிரபலமான 117 தனியார் மருத்துவமனை உரிமையாளர்களுடன் கொரோனா தடுப்பூசி தேவைகள் குறித்த மண்டல அளவிலான ஒருங்கிணைப்பு கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆலோசனை மேற்கொண்டார்.

பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர்,”தமிழகம் முழுவதும் தனியார் மருத்துவமனைகளில் இதுவரை 12 லட்சத்து 65 ஆயிரத்து 89 கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. நேற்று 5 லட்சம் தடுப்பூசிகள் வந்து உள்ளது. இதன் மூலம், இன்னும் 2 நாட்களில் மொத்தம் 2 கோடி பேருக்கு தமிழகத்தில் தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்ற புதிய உச்சத்தை எட்டி விடும்.” என்றார்.

மேலும் இது குறித்து அமைச்சர் பேசுகையில், “தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி திட்டம் தொடர்பாக பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தனியார் மருத்துவமனைகளில் கோவேக்சின் தடுப்பூசிக்கு ரூ.1,410-ம், கோவிஷீல்டுக்கு ரூ.780-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அரசு சார்பில் இலவசமாக வழங்கப்படும் முகாம்களில் சென்று தடுப்பூசி செலுத்த செல்கிறார்கள்.

இந்தியாவில் முதல் முறையாக தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளில் மக்களுக்கு இலவச தடுப்பூசி போடும் திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. தொழில் நிறுவனங்களின் கார்ப்பரேட் சமூக பொறுப்புணர்வு (சி.எஸ்.ஆர்) நிதியை தனியார் மருத்துவமனைகளுக்கு அளித்து இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். இதன் மூலம் பொதுமக்களுக்கு விரைந்து தடுப்பூசி செலுத்தும் பணி நிறைவுபெறும்.

மாவட்ட ஆட்சியர் நேரடி கண்காணிப்பில்

இதுகுறித்து தனியார் மருத்துவமனை உரிமையாளர்களிடம் பேசினோம் அவர்களும் மகிழ்ச்சியோடு வரவேற்றனர். அத்துடன் சி.எஸ்.ஆர். நிதி பங்களிப்புடன் தனியார் மருத்துவமனை உரிமையாளர்கள் தங்கள் பங்களிப்பாக ரூ.61 லட்சத்து 45 ஆயிரம் நிதியை இலவச தடுப்பூசி போட கலெக்டர் மூலம் கொடுத்து உள்ளார்கள்.

இந்த நிதி மூலம் 7 ஆயிரத்து 877 பேருக்கு தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக கோவிஷீல்டு தடுப்பூசி போடலாம். 45 நாட்கள் கழித்து தடுப்பூசிகள் கொள்முதல் செய்து ஒவ்வொரு மருத்துவமனை வளாகத்திலும் எந்த நிறுவனத்தின் சி.எஸ்.ஆர். நிதி வழங்கப்பட்டுள்ளது, எவ்வளவு தடுப்பூசிகள் இலவசமாக அப்பகுதி மக்களுக்கு செலுத்தப்பட உள்ளது என்கின்ற தகவலை பலகையில் ஒட்டி கலெக்டர் கண்காணிப்பார்.

தொழில்முனைவோர்கள் தரும் சி.எஸ்.ஆர். நிதி மூலம் எவ்வுளவு தடுப்பூசி போடப்படும், எந்த மருத்துவமனைக்கு அந்த சி.எஸ்.ஆர். நிதி பயன்படுத்தப்படுகிறது என்கிற விளம்பர பலகை அந்தந்த தனியார் மருத்துவமனைகள் முன்பு வைக்கப்படும். கலெக்டரின் கண்காணிப்பில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

இந்தியாவிலேயே முன்மாதிரி திட்டம்

கோவையில் நடைமுறைப்படுத்தப்பட்ட உள்ள இந்த திட்டம் இந்தியாவிலேயே முதல் முறைமுறையாக செயல்பாட்டுக்கு வரும் திட்டமாக உள்ளது. இந்த திட்டத்திற்கு 4 மாவட்டங்களை சேர்ந்த தொழில் முனைவோர் தங்களது சி.எஸ்.ஆர். நிதியை தர விரும்பினால் அந்தந்த மாவட்ட கலெக்டரை அணுகி எந்த மருத்துவமனைக்கு எவ்வளவு தொகை தருகிறோம் அதில் எத்தனை மக்கள் பயன்பெறுவார்கள் என்கிற கருத்துக்களை வழங்கலாம். இந்த திட்டத்தின் மூலம் இந்தியாவுக்கே தமிழகம் முன்மாதிரி மாநிலமாக திகழும்.” என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறt.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Coimbatore news in tamil use csr funds to vaccinate public free of cost tn health minister to private hospitals

Next Story
Tamil News Today : தமிழ்நாட்டில் புதிதாக 1,891 பேருக்கு கொரோனா: 27 பேர் பலி
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express