கோவை உக்கடம் ஆத்துப்பாலம் உயர் மட்ட மேம்பாலம் கட்டும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. இந்நிலையில் உக்கடம் பேருந்து நிலையம் சந்திப்பு அருகே - 110 கிலோ வோல்ட் உயர் அழுத்த மின் கம்பிகள் இருப்பது பாலம் கட்டும் பணிக்கு இடையூறாக இருந்தது.
இதற்கு தீர்வு காணும் வகையில் பேருந்து நிலையம் சந்திப்பில் இருந்து துணை மின் நிலையம் வரை - சாலையை தோண்டி, ஐந்தடி ஆழத்தில் மின் கம்பிகள் பதிக்கப்பட்டன.
மின் இணைப்பு கொடுத்து முன்னோட்டம் பார்க்கும் இறுதி கட்டப்பணி இன்று நடைபெற்று வருகிறது. முன்னதாக இன்று அப்பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
Advertisment
Advertisements
இறுதி கட்டப்பணி இன்று நடைபெற்று வருகிறது
காலை 8 மணிக்கு துவங்கிய இந்த பணி மாலை 5 மணி வரை மணி வரை நடக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பாதுகாப்பு கருதி கோவை மாவட்ட மாநகர காவல் துறையினர், போக்குவரத்தில் மாற்றம் செய்துள்ளனர்.
எனவே உக்கடம் முதல் பொள்ளாச்சி சாலை, பாலக்காடு சாலை செல்லும் வாகனங்கள் பேரூர் புறவழிச்சாலை, புட்டுவிக்கி, சுண்ணாம்பு காளவாய் வழியாக செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் திருச்சி சாலையில் இருந்து பொள்ளாச்சி சாலை செல்ல வேண்டிய வாகனங்கள், வின்சென்ட் ரோடு வழியாக உக்கடம் பஸ்ஸ்டாண்ட் சென்று, புட்டுவிக்கி ரோடு வழியாக பொள்ளாச்சி சாலையை அடையலாம் என்று, போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர். இரு சக்கர வாகனம் மட்டும் செல்ல சிறு பாதை மட்டும் விடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“