பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்
Coimbatore News in Tamil: கோயம்புத்தூர் பத்திரிக்கையாளர் மன்றத்தில் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள், அரசியல் கட்சிகள், ஜமாத்துகளின் கூட்டமைப்பினர் நடைபெற்ற என்.ஐ.ஏ விசாரணை குறித்தும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் செய்தியாளர்களை சந்தித்தனர். இந்த சந்திப்பில் கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சாதிக் செய்தியாளர்களை சந்தித்தார்..
சிறுபான்மை சமூகத்தை அச்சுறுத்தும் விதமாக மத்திய அரசு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நிர்வாகிகளின் வீடுகளில் சோதனை செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த செயல்பாடுகளை கண்டிக்கின்றோம். என்.ஐ.ஏ. அமலாக்கத்துறை, சி.பி.ஐ ஆகியவை யாரெல்லாம் பாஜகவை எதிர்க்கிறார்களோ அவர்களை ஒடுக்க செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
என்.ஐ.ஏ., தீவிரவாத எதிர்ப்பு படையாக உருவாக்கப்பட்டது. ஆனால் இவர்கள் மாநிலத்தின் எந்த அனுமதியும் இல்லாமல் ரைடு செய்கின்றனர். சிறுபான்மை அமைப்புகளை ஒடுக்குவதற்காக இந்த ரைடு நடைபெறுகிறது. பாப்புல ஃப்ரெண்ட் ஆப் இந்தியா கொரோனா காலத்தில் பல்வேறு நல பணிகளை செய்ததுள்ளது.
நடைபெற்ற சோதனையில் எந்த டாக்குமெண்ட்களும் கைப்பற்றப்படவில்லை. ஆனால் யு.ஏ.பி.ஏ., வழக்கு பதிவு செய்துள்ளனர். என்.ஐ.ஏ நடவடிக்கையை கண்டித்து தமிழக அளவில் போராட்டம் நடத்த உள்ளோம். கோவையில் பாப்புலர் ஃப்ரெண்ட் ஆப் இந்தியாவின் நிர்வாகி இஸ்மாயில் கைதை கண்டித்து போராட்டம் நடத்தியவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அனைத்து துறைகளிலும் மத்திய அரசு தோல்வி அடைந்துள்ளது. அனைத்தும் விலைவாசி ஏற்றம் அடைந்துள்ளது. பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்பட்டுள்ளது. இதனை மறைப்பதற்காக இது போன்ற செயலில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. இவ்வாறு அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள், அரசியல் கட்சிகள், ஜமாத்துகளின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தனர்.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil