கோவை மாவட்டம் முழுவதும் நேற்று முதல் இடைவிடாத கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதன் காரணமாக நொய்யல் ஆற்றில் நீர்வரத்து சற்று அதிகரித்துள்ளது. இந்த நிலையில் நொய்யல் ஆற்றின் வழித்தடமான ஆத்துப்பாலம் சுண்ணாம்பு கால்வாய் தடுப்பணையில் சாய கழிவு கலந்து வரும் மழைநீரால் தடுப்பணையில் வெள்ளை நிறத்தில் நுரை தேங்கி ரசாயன நுரை மலை போல் குவிந்துள்ளது. ரசாயன கழிவு கலந்த ஆற்று நீர் வெள்ளலூர், சூலூர் வழியாக செல்கிறது.
நொய்யல் ஆற்றில் கலக்கும் ரசாயன கழிவு நீரால் ஆற்று நீர் செல்லும் பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி வருகிறது. ஆண்டுதோறும் மழையின் காரணமாக நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகமாகி வரும் நிலையில், இந்த நீரில் ரசாயன கழிவு நீர் கலப்பதால் விவசாயத்திற்கும், பொதுமக்களும் பயன்படுத்தாத சூழ்நிலை ஏற்பட்டு வருவதால் ரசாயன நீர் கலப்பதை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
செய்தி: பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“