கோவையில் கட்டுமான பணியின் போது சுவர் இடிந்து விபத்துக்குள்ளானதில் 2 வடமாநில தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே காணியாலாம்பாளைம் என்ற இடத்தில் 9 ஏக்கர் பரப்பளவில் தனியார் பழச்சாறு தொழிற்சாலை கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணியில் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இங்கு ஜேசிபி இயந்திரம் கொண்டு சுவர்களுக்கு நடுவே மணல் நிரப்பும் பணி நடந்து கொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராத விதமாக சுவர் இடிந்து விழுந்ததில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ரெகேசன் மற்றும் சனார்மான்ஜி ஆகிய இருவர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.
அவர்களை மீட்டு மருத்துவனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இருவரும் உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், விபத்து நடந்த இடத்தில் பொள்ளாச்சி ஏ.எஸ்.பி சிருஷ்டிசிங் ஆய்வு மேற்கொண்டார்.