கோவையில் நடைபெற்ற நொய்யல் பெருவிழாவின் சிறப்பு விருந்தினராக ஆளுநர் ஆர். என்.ரவி கலந்து கொண்டார்.
Advertisment
தென்னாடுடைய சிவனே போற்றி, என்னாடவருக்கு இறைவா போற்றி என தமிழில் உரையை துவங்கிய ஆளுநர், சந்நியாசிகள் பங்கேற்றுள்ள நிகழ்வில் பங்கேற்பது ஆசிவதிக்கப்பட்டதாக உணர்வதாகவும், நொய்யல் ஆறு மீட்பு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அகில பாரதீய சந்நியாசிகள் சங்கம் சார்பில் முன்னெடுக்கப்பட்டுள்ளது இந்த நிகழ்வு மிகவும் பாராட்டுக்குரியது என்றார்.
நம் நாட்டில் நீர் நிலைகள் உடனான தொடர்பு என்பது உணர்வுகளுடன் தொடர்புடையது, ஆனால், பல அந்நியர்களின் படையெடுப்பு, ஆக்கிரமிப்பால் அந்த உணர்வு துண்டிக்கப்பட்டது.
பாரதம் என்றால் என்ன என்ற கேள்விக்கு ஆறு சொல்லும் கலாச்சாரம் கொண்டவர்கள் நாம். அன்னை பூமியை பாழாக்கி வரும் இந்த காலத்தில் இதுபோன்று நிகழ்வு அவசியம், அன்னை இயற்கையை பாழாக்கி வருவதன் விளைவு தான், பருவநிலை மாற்றத்திற்கு காரணம்.
தண்ணீர் இல்லையென்றால் ஒன்றும் இல்லை என்பதனால், நீரை அன்னையாக பார்த்து பிரார்த்திக்க வேண்டும்.
அன்னியர்கள் படையெடுப்புக்கு பிறகும், நம்மை விட்டு சென்றவுடன், நாட்டில் தொழிற்சாலைகள், பொருளாதாரம் வளர்ந்தாலும் பாரதத்துடனான உயிர் தொடர்பு துண்டிக்கப்பட்டது.
சாதி, மதம், ஆரியன், திராவிடன் என பிரிவினையை நம்மிடையே ஏற்படுத்தினார்கள், நம் நாட்டை வலுப்படுத்துவதை நம் ஒவ்வொருவரின் கடமை.
ராஜா, ராணியாக செயல்படுவது நம் பாரதமில்லை, சமூகம் அடிப்படையில் ஒரு குடும்பமாக வாழ்பவர்கள் நாம் என்பதனால், அந்த சமூகத்தை மீட்க வேண்டிய நிலையில் உள்ளோம்.
இந்த பாரதம் ரிஷி, குருமார்களால் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், அதிகாரம் செய்யும் நோக்கம் இல்லாமல் அறிவை வழங்கும் என்பதால் ரிஷிகளின் வெளிச்சமே தற்போது உலகத்திற்கு தேவையானது.
அனைவரும் ஒரு குடும்பம் இந்தியாவின் சமூகத்தை எழுப்புவதுடன், நாம் யார் என்பதை உணர வைக்க வேண்டும், அதற்கு நீர்நிலைகள் பாதுகாப்பு அவசியம் என்பதால் இந்நிகழ்வு வெற்றியடைய வாழ்த்துகள், வளமாக மட்டுமின்றி அன்னையாக ஆறுகளை பார்க்கும் மன நிலையை உருவாக்க வேண்டும் என்று உரையை நிறைவு செய்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி…
செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“