கோவை ராமநாதபுரத்தில் தனியார் அரங்கில் நாம் தமிழர் கட்சியின் கோவை மண்டலத்திற்கான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து சீமான் பேசியது பின்வருமாறு:-
பாராளுமன்ற தேர்தலுக்காக இந்த கலந்தாய் கூட்டம் நடைபெறுகிறது. டெல்டா மற்றும் வடக்கு மாவட்டங்களில் அக்டோபர் மாதம் இறுதிக்குள் இந்த கலந்தாய்வு கூட்டம் நடைபெறும். தனி தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது தான் நாம் தமிழர் கொள்கை. மக்கள் எதிர்பார்ப்புக்காக தேர்தலில் நாம் தமிழர் தனித்து நிற்கும்.
37% அண்ணாமலை தனித்து நின்று வெற்றி பெறட்டும் ஏன் கூட்டணி வைத்துள்ளார்? அண்ணாமலை தான் வெறுப்பு அரசியல் நடத்தி வருகிறார். வயிறு காய்ந்து இருக்கும் போது வானில் சந்திராயன் எதற்கு. இந்தியாவில் 80 கோடி ஏழை மக்கள் இருக்கிறார்கள். ஏழைகளுக்கு பசியாற்ற வேண்டும். சந்திரனில் முதலில் யார் குடியரப் போவது இந்துவா, முஸ்லிமா, கிறிஸ்துவரா?.
விஜயலட்சுமி யார் அன்னை தெரசா வா?, எனக்கும் விஜயலட்சுமி-க்கும் திருமண ஆயிருந்தால் போட்டோவை வெளியிட வேண்டும். பல லட்சம் பேர் என்னோடு போட்டோ எடுத்து இருக்கிறார்கள். விஜயலட்சுமி 2013-ம் ஆண்டு புகார் அளித்தார். அப்புறம் விஜயலட்சுமி எங்க போனார். அதன் பிறகு, 2021-ம் ஆண்டு தேர்தலின் போதும் தற்போது 2024-ம் ஆண்டு தேர்தல் வர 6 மாதங்களுக்கு முன்பு பிரச்சனை ஏற்படுத்துகிறார்.
தமிழ்நாட்டிற்கு காவிரியில் தண்ணீர் தராத காங்கிரஸிற்கு திமுக ஆதரவு அளிக்கிறது. முதலில் நம் தமிழ்நாட்டு மக்களுக்கு காவிரியில் தண்ணீர் வாங்க தர வேண்டும்.
ரபேல் விமானத்தை ஏன் பிரான்சில் வாங்குகிறார்கள்? அதே பிரான்ஸ் நாட்டினர் மற்ற நாட்டுகளுக்கும் விமானத்தை விற்பனை செய்து வருகிறார்கள். இதில் இந்தியா ராணுவம் பாதுகாப்பு எங்கே இருக்கிறது.
தி.மு.க - அ.தி.மு.க உடன் நடப்பது பங்காளி சண்டை, அன்ணன் தம்பி சண்டை. ஆனால், இதில் பா.ஜ.க ஏதற்கு தலையீடுகிறது. பா.ஜ.க இந்தியா நாட்டை பிச்சைகாரர் நாடாக ஆக்கிவிட்டது. தமிழ் தேசியத்தை வளர்க்க வேண்டும் என்பது தான் எங்களுடைய கொள்கை.
சாதி, மதம் உணர்வு சாகும் போது, தமிழ் இனம் தானாக வளரும். மொழி பற்று இனப்பற்று வரும் போது சாதி பற்று மறைந்துவிடும். தமிழ் நாட்டில் எத்தனை தெருவில் தமிழில் பெயர் உள்ளது.
தமிழ்நாட்டில் மோடி போட்டியிட்டால் தி.மு.க தைரியம் இருந்தால் உதயசூரியன் போட்டியிட்டால், நான் அங்கு வேட்பாளர் போட மாட்டேன்.
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை சாலை, ஒரே கல்வி கொள்கையை நான் ஆதரிக்கிறேன். ஆனால் காவிரியில் இருந்து முதலில் பா.ஜ. க அரசு தமிழ்நாட்டுக்கு தண்ணீர் கொண்டு வந்தால் கும்பிடுவேன். 1969-ம் ஆண்டு பிறப்பு, இறப்பு சான்றிதழ் தேவையில்லை என்று கூறினார்கள். ஆனால் மோடி, அமித்ஷா குடியுரிமை உள்ளதா? காங்கிரஸ் இலங்கையில் தமிழினத்தை அளித்தது. பா.ஜ.க 2ஜி- காக ஒரு நாள் நாடாளுமன்றத்தை முடக்கியது. ஆனால் இலங்கையில் தமிழின மக்கள் அளித்த போது யாரும் குரல் கொடுக்கவில்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.