உடல் பருமன் கட்டுப்பாடு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கோவையில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று ஓடினர்.
கோவை தனியார் வி.ஜி.எம் மருத்துவமனை மற்றும் அத்தலெட்டிக் கிளப் சார்பில் உடல் பருமன் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாரத்தான் ஓட்ட பந்தயம் கோவை வ.உ.சி மைதானத்தில் நடைபெற்றது.
/indian-express-tamil/media/media_files/EdoU9Pefh50tZmpdH6Sp.jpeg)
10 கிலோ மீட்டர், 5 கிலோ மீட்டர், 3 கிலோ மீட்டர் என மூன்று பிரிவுகளாக நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டியில் மாற்றுத் திறனாளிகள் உட்பட ஆண்கள், பெண்கள் என 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று ஓடினர்.
இம்மரத்தானை மருத்துவர் மோகன் பிரசாத் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“