coimbatore: கோவையில் மத்திய பகுதியில் மாவட்ட நிர்வாக அலுவலகமான கலெக்டர் அலுவலகம், மாநகர காவல் துறை ஆணையர் அலுவலகம், நீதிமன்றம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் பிற தலைமை அலுவலகங்கள் நிறைந்த பகுதியாக கோபாலபுரம் பகுதி உள்ளது.
இதேபோல் மாநகர ஆணையர் அலுவலகம், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் நீதிமன்றங்களுக்கு செல்லும் அனைத்து தரப்பு மக்களும் வந்து செல்லும் மாநகரின் மையப் பகுதியாக உள்ளது. இதேபகுதியில் தான் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் உள்ளூர் மற்றும் வெளி மாநிலங்களுக்கு செல்கிற ரயில் நிலையமும் அமைந்துள்ளது.
இந்தியன் வங்கி ஏ.டி.எம், சிட்டி யூனியன் வங்கி ஏ.டி.எம் இத்தனை பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த பகுதியில் உள்ளது. ரயில் நிலையதிற்கும், அரசு அலுவலகங்களுக்கும் நாள்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு மர்ம நபர்கள் ஏ.டி.எம் கதவுகளை உடைத்து கொள்ளை அடிக்க முயற்சி செய்து உள்ளனர்.
இந்நிலையில் இன்று அந்த வங்கியின் அதிகாரிகள் ஏ.டி.எம் இயந்திரத்தை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் அதில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராக்களின் காட்சிகளை சேகரித்து ஆய்வு செய்து வருகின்றனர். நகரின் மையப் பகுதியில் நடைபெற்ற கொள்ளை முயற்சியால் அதிகாரிகளும் பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“