Advertisment

கேரளா- சேலம்; ஊழியர்களை விமானத்தில் பறக்க வைத்து கனவை நிறைவேற்றிய முதலாளி: கோவையில் சுவாரஸ்யம்

தம் தந்தை காலம் முதல் பணிபுரிந்து வரும் தொழிலாளர்களை அவரது மகன், தன் சொந்த செலவில் விமானத்தில் பயணம் செய்ய வைத்து பாராட்டுகளை பெற்று வருகிறார்.

author-image
WebDesk
New Update
New Project - 2024-09-23T155028.141

கோவை பேரூர் பகுதியில் "பிரியா உணவு கேட்டரிங்" நடத்தி வரும் லட்சுமி ராஜனின் மகன் பிரகாஷ் ராஜ். இவரது கேட்டரிங் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களை விமானத்தில் பயணிக்க வைத்துள்ளார். கேட்டரிங் நிறுவனத்தில் பணிபுரியும் சுமார் 26க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை விமானம் மூலம் "கேரள மாநிலம் கொச்சினிலிருந்து -  சேலம் வரை பறக்க" வைத்து கேரளாவில் உள்ள ஆலப்புழா படகு சவாரியில் ஒரு நாள் முழுக்க அவர்களின் சுற்றுலா பயணத்தை மேற்கொள்ள வைத்து அவர்களின் மகிழ்ச்சியில் தனது கனவை நிறைவேற்றி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார்.

Advertisment

இதுகுறித்து தொழிலாளர்கள் கூறுகையில், தங்களின் முதலாளியான லட்சுமி ராஜன் அவருடைய மகன் பிரகாஷ் ராஜ் 6-வயதாக இருக்கும் போது உன்னுடைய கனவு என்ன, நீ பெரியவன் ஆகி எங்களுக்கெல்லாம் என்ன செய்யப் போகிறார் என்று எதார்த்தமாக கேட்டுள்ளார். அப்போது பிரகாஷ் ராஜ், உங்களையெல்லாம் ஒரு நாள் விமானத்தில் நான் அழைத்துச் செல்வேன் என்று கூறியுள்ளார். இப்போது அதை நிறைவேற்றியும் உள்ளார் என்றனர்.  

WhatsApp Image 2024-09-23 at 14.26.38

ஆறு வயதில் கூறியதை சவாலாகவும் மற்றவர்களுடைய கனவை நினைவாக்கும் விதமாக சுமார் 35 ஆண்டுகளுக்குப் பிறகு தனது தொழிலாளர் சொந்தங்களான தன்னுடைய தந்தை காலத்தில் பணிபுரிந்த சரோஜினி என்கின்ற 75" வயது பெண்மணி உட்பட சுமார் 26"க்கும் மேற்பட்ட சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விமானத்தில் பறக்க வைத்து அவர்களது அக்கனவை நிறைவேற்றியுள்ளார்.

WhatsApp Image 2024-09-23 at 14.26.36

நாம் நினைப்பதையோ நாம் கனவு காண்பதையோ நடத்த முடியாமல் நாளோடு நாள் ஓடிக் கொண்டிருக்கும் தற்போதைய கால சூழ்நிலையில் - தனது தந்தை காலத்தில் இருந்து பணிபுரிந்து வரும் தொழிலாளர்களின் கனவை நிறைவேற்றி தந்தைக்கு பெருமை சேர்த்து அதில் மகிழ்வு அடைந்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறார்.

நம்முடன் இருப்பவரை நாம் நன்றாக பார்த்துக்  கொண்டால் - நம்மை மேலிருப்பவன் பார்த்துக் கொள்வான் என்ற சொற்களுக்கு ஏற்றார் போல் -  இத்தகைய விமான பயண கனவை  நிறைவேற்றி தொழிலாளி மற்றும் முதலாளியின் இருவருக்குமான அன்பை வலுவடைய செய்துள்ளார் பிரகாஷ் ராஜன் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தி பி.ரஹ்மான்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment