பி.ரஹ்மான் – கோவை மாவட்டம்
இன்று தீபாவளி பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகை கொண்டாடும் அனைத்து மக்களும் அதிகாலை முதலே புத்தாடை அணிந்து கோவில்களுக்கு சென்று வழிபாடு மேற்கொண்டு பட்டாசுகள் வெடித்து உற்றார் உறவினர்களுக்கு இனிப்புகள் வழங்கி தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.
கோவை மாவட்டத்திலும் தீபாவளி பண்டிகை களைகட்டியுள்ளது. அதிகாலை முதலே பொதுமக்கள் புத்தாடை அணிந்து கோவில்களுக்கு சென்று கடவுள் வழிபாடு செய்து, பட்டாசுகள் வெடித்தும் உற்றார் உறவினர்களுக்கு இனிப்புகள் வழங்கி தீபாவளியை கொண்டாடி வருகின்றனர். அதே சமயம் இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அதிமாகவே காணப்படுகிறது.
மேலும், முதியோர் இல்லம், குழந்தைகள் காப்பகங்களிலும் பொதுமக்கள் பலரின் பங்களிப்போடு தீபாவளி பண்டிகை மகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட்டு வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil