தமிழக மீனவர்களை கொலை செய்யும் சிங்கள அரசை கண்டித்து கோவையில் உள்ள சிங்களத்தைச் சேர்ந்த பர்னிச்சர் நிறுவனமான தம்ரோ கடைகளை நிரந்தரமாக மூட வலியுறுத்தி இன்று பெரியார் இயக்கங்கள் சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
அப்போது தம்ரோ கடைகளை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் சிங்கள அரசை கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பியவாறு தந்தை பெரியார் திராவிட கழகம், தமிழ் புலிகள் கட்சி உள்பட பல்வேறு பெரியாரிய இயக்கங்கள் கடையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
/indian-express-tamil/media/media_files/egfZEoY1zJNPbSnlSHAT.jpeg)
முற்றுகை போராட்டத்தை முன்னிட்டு தம்ரோ பர்னிச்சர் கடை முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“