Coimbatore: Periyar restaurant looted, 6 members of Hindu front arrested - கோவையில் பெரியார் உணவகம் சூறை: இந்து முன்னணியை சேர்ந்த 6 பேர் கைது | Indian Express Tamil

கோவையில் பெரியார் உணவகம் சூறை: இந்து முன்னணியை சேர்ந்த 6 பேர் கைது

coimbatore: 6 members of Hindu front arrested for looting Periyar restaurant Tamil News: கோவை, காரமடை கண்ணார்பாளையத்தில் திறக்கப்பட இருந்த தந்தை பெரியார் உணவகத்தை இந்து முன்னணியைச் சேர்ந்த 6 பேர் சூறையாடி, கொலை வெறித்தாக்குதல் நடத்தியுள்ளனர். தற்போது அந்த 6 பேரையும் கைது செய்துள்ள போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Coimbatore: Periyar restaurant looted, 6 members of Hindu front arrested
Periyar restaurant – Coimbatore

பி.ரஹ்மான் – கோவை மாவட்டம்

கோவை மாவட்டம் காரமடையை அடுத்துள்ள கண்ணார்பாளையம் நால் ரோட்டில் பிரபாகரன் என்பவர் தந்தை பெரியார் உணவகம் என்ற பெயரில் ஹோட்டல் ஒன்று இன்று திறக்க உள்ளார். அதற்கான பணிகளில் நேற்று தொழிலாளர்களுடன் ஈடுபட்டு வந்தார். அப்போது அங்கு வந்த இந்து முன்னணியைச் சேர்ந்த 6 பேர் ஹோட்டல் உரிமையாளருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் கடையை அடித்து நொறுக்கியும் உள்ளனர். கடையின் உரிமையாளரை தகாத வார்த்தைகளால் பேசியதோடு கடுமையாக தாக்கியுள்ளனர். அங்கிருந்த அருண் (21) என்பவரையும் தாக்கியுள்ளனர். இதனையடுத்து கொலை வெறியாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியைச் சேர்ந்த 6 பேரும் அங்கிருந்து தப்பியுள்ளனர்.

இச்சம்பவத்தில் கடை ஊழியரான அருண் என்பவர் படுகாயமடைந்து காரமடையில் உள்ள தனியார் மருத்துவமனையில் 36 தையல்கள் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடையின் உரிமையாளர் பிரபாகரனுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து கடையின் உரிமையாளர் பிரபாகரன் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காரமடை போலீசார் தாக்குதலில் ஈடுபட்ட 5 பேரை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில், பெரியார் உணவகத்தை சூறையாடிய இந்து முன்னணியைச் சேர்ந்த ரவி பாரதி, சரவண குமார், சுனில், விஜய குமார், பிரபு, பிரபாகரன் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், அவர்கள் 6 மீதும் இந்திய தண்டைனைச் சட்டம் 147, 447, 294 (b), 323 section 4 of and section 3 of TNPOPPDL ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Coimbatore periyar restaurant looted 6 members of hindu front arrested