அமித்ஷாவுக்கு எதிராக கருப்பு கொடி ஆர்ப்பாட்டம்: கோவை பெரியாரிய, கம்யூனிஸ்ட் இயக்கங்கள் முடிவு

பிப்ரவரி 25 ஆம் தேதி கோவைக்கு வரும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு கருப்புக் கொடி காட்ட பெரியாரிய அமைப்புகள், கம்யூனிஸ்ட் இயக்கங்கள் முடிவு செய்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
coimbatore periyarist communist organizations to Black flag protest against Amit Shah visit Tamil News

பிப்ரவரி 25 ஆம் தேதி கோவைக்கு வரும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு கருப்புக் கொடி காட்ட பெரியாரிய அமைப்புகள், கம்யூனிஸ்ட் இயக்கங்கள் முடிவு செய்துள்ளனர்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகின்ற 25 ஆம் தேதி கோவைக்கு வருகை புரிகிறார். 25 ஆம் தேதி மாலை விமானம் மூலம் கோவைக்கு வரும் அவர், 26 ஆம் தேதி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இந்நிலையில், கோவை வரும் அமித்ஷாவுக்கு கருப்பு கொடி காட்டுவதற்கு பெரியாரிய அமைப்புகள், கம்யூனிஸ்ட் இயக்கங்கள் முடிவெடுத்துள்ளனர். காந்திபுரம் பகுதியில் உள்ள தந்தை பெரியார் படிப்பகத்தில் அனைத்து கட்சி மற்றும் இயக்கங்கள் சார்பில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு இந்த முடிவு  எடுக்கப்பட்டுள்ளது.

Advertisment

இது குறித்து பேட்டியளித்த தந்தை பெரியார் திராவிட கழக  பொது செயலாளர் கு.இராமகிருட்டிணன், மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழகத்தை புறக்கணித்ததாகவும்,மும்மொழிக் கொள்கையை ஏற்காவிட்டால் நிதியை தர மாட்டோம் என்று இந்தியை திணிக்க முயல்வதாகவும், அதனை கண்டிக்கும் வகையில் கோவைக்கு வரும் அமித்ஷாவிற்கு கருப்புக்கொடி காட்டும் போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்தார். இதில் 20-க்கும் மேற்பட்ட அமைப்பினர் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறினார்.

செய்தி: பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்.

 

Amit Shah Coimbatore

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: