கோவை பெட்ரோல் குண்டு வீச்சு; பொய் வழக்கு போடும் போலீஸ்... கலெக்டரிடம் மனு
Coimbatore Police filing false case against PFI activist, Victims petition to Collector Tamil News: கோவையில் விசாரணை என்ற பெயரில் போலீசார் அத்துமீறி நடந்து கொள்வதுடன், பொய் வழக்கு போடுவதாகவும் கூறி பாதிக்கப்பட்ட பெண்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர்.
Coimbatore Police filing false case against PFI activist, Victims petition to Collector Tamil News: கோவையில் விசாரணை என்ற பெயரில் போலீசார் அத்துமீறி நடந்து கொள்வதுடன், பொய் வழக்கு போடுவதாகவும் கூறி பாதிக்கப்பட்ட பெண்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர்.
Coimbatore News in Tamil: கோவையில் நடைபெற்ற பெட்ரோல் குண்டு தாக்குதல் சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி கைது செய்து வருகின்றனர். இதில் பி.எப்.ஐ அமைப்பை சேர்ந்த யேசுராஜ் என்பவர், குனியமுத்தூர் ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் வீடு தாக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், யேசுராஜ் குடும்பத்தினர் மற்றும் இந்த வழக்கில் கைது செய்யபட்ட நபர்களின் குடும்பத்தை சேர்ந்த 50 க்கும் மேற்பட்டோர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மாவட்ட ஆட்சியர் சமீரனிடம் மனு அளித்தனர்.
Advertisment
Advertisements
அப்போது காவல் துறை விசாரணை என்று அழைத்து சென்று பொய்வழக்கில் கைது செய்து இருப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம்சாட்டினர். மேலும், விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று துன்புறுத்துவதாகவும், விசாரணை என்று அழைத்து செல்லும் இளைஞர்களை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்திற்கு அழைத்துச் சென்று தாக்குகின்றனர் எனவும் தெரிவித்தனர்.பொய்வழக்கில் கைது செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியரிடம் பெண்கள் முறையிட்டனர்.
மதிவதனி - கைது செய்யப்பட்ட நபரின் மனைவி ஜெரீனா - பாதிக்கப்பட்ட மனு புகார்தாரர் ஜொஹரா - பாதிக்கப்பட்ட மனு புகார்தாரர்
இது குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததை தொடர்ந்து ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தவர்கள் கலைந்து சென்றனர்.