பி.ரஹ்மான் கோவை மாவட்டம்
Coimbatore News in Tamil: கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் எட்டு குளங்கள் அமைந்துள்ளன. இவற்றில் உள்நாட்டு பறவைகள் மற்றும் வெளிநாட்டு பறவைகள் அவ்வப்போது முகாமிடுவது வழக்கம். அந்த வகையில் வாலாங்குளம் பகுதியில் பெலிகன் பறவைகள் அதிகாலை நேரத்தில் முகாமிட்டு வருகிறது.
இந்நிலையில், வாலாங்குளத்தில் உள்ள மீன்களை சாப்பிடும் இந்த பெலிகன் பறவைகளில் ஒன்றின் அலகில், குளத்தில் கிடந்த பிளாஸ்டிக் தாள் சிக்கிக்கொண்டது. மேல் அலகில் சிக்கிக்கொண்ட பிளாஸ்டிக் தாளை அகற்ற முடியாமல் சிக்கிக்கொண்ட நிலையில், பெலிக்கன் பறவை அந்த பிளாஸ்டிக் கழிவுடன் உணவை உட்கொண்டுள்ளது.
இந்த நிலையில், தற்போது பிளாஸ்டிக் தாளுடன் உணவு உட்கொள்ள பெலிகன் பறவை போராடும் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வாலாங்குளம் அழகு படுத்தபட்டதுடன் குளத்தையொட்டி பகுதிகளில் உணவு கூடங்கள் அனுமதிக்கப்பட்டு இருப்பதுடன், படகு சவாரியும் துவங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நடைபயிற்சிக்காகவும்,புகைபடம் எடுக்கவும்,படகு சவாரிக்கும் வரும் பொதுமக்கள் பிளாஸ்டிக் கழிவுகளை குளங்களிலேயே வீசிச் செல்வது பறவைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதை இந்த புகைபடங்கள் வெளிப்படுத்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil