பள்ளி மாணவிகளுக்கு பாலியல் சீண்டல் கொடுத்த ஓவிய ஆசிரியர் ராஜன் போக்சோ வழக்கில் கைது செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாநகர் ரேஸ் கோர்ஸ் பகுதியில் அமைந்துள்ள மத்திய அரசு நடத்தும் பள்ளியில் மாணவிகளிடம் ஓவிய ஆசிரியர் ஒருவர் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது. பள்ளியில் ஓவிய வகுப்பு மற்றும் யோகா வகுப்பு ஆகியவை எடுக்கும் பொழுது மாணவிகளை தவறாக தொடுவதாக பாதிக்கப்பட்ட மாணவிகள் பள்ளி முதல்வரிடம் புகார் அளித்துள்ளனர்.
இந்நிலையில், பள்ளியின் முதல்வர் அளித்த புகாரின் பேரில் ஓவிய ஆசிரியரை காந்திபுரம் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் குறிப்பிட்ட மாணவிகளுக்கு மட்டும் தான் பாலியல் சீண்டில் கொடுத்துள்ளாரோ அல்லது வேறு ஏதும் மாணவிகளுக்கும் கொடுத்துள்ளார் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை தீவிரப் படுத்தி உள்ளனர்.
கோவையில் நேற்று 17 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த 7 கல்லூரி மாணவர்களை கைது செய்து நிலையில், தற்போது மீண்டும் இந்த சம்பவம் அரங்கேறி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.