கோவையில் அசாதாரண சூழல் நிலவிவரும் நிலையில் காந்திபுரத்தில் ரேபிட் ஆக்ஸன் ஃபோர்ஸ் பாதுகாப்பு படையினர் கொடி அணிவகுப்பு நடத்தினர். அப்போது, நூற்றுக்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினர் காந்திபுரத்தில் மக்கள் அதிகம் கூடும் இடத்தில் இந்த ஊர்வலத்தை நடத்தினர்.
Advertisment
கோவையில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு
துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு படையினர் காந்திபுரம் திருவள்ளுவர் பேருந்து நிலையத்தில் தொடங்கி கிராஸ் கட் ரோடு வழியாக ராம்நகர் சென்று மீண்டும் காந்திபுரம் சென்றடைந்தனர்.
இதற்கு முன்னர் ஊர்வலத்திற்கு வந்த மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் யார் ஈடுபட்டாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரித்தார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், “கூடிய விரைவில் குற்றவாளிகளை கைது செய்வோம். செக்போஸ்ட் இல்லாத இடங்களில் புதிதாக கேமராக்கள் அமைக்க திட்டம் உள்ளது.
யாரேனும் அமைதிக்கு இடைஞ்சல் ஏற்படுத்தினால் கடுமையான பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்படும். ஒவ்வொரு சம்பவத்திற்கும் மூன்று தனிப்படை அமைக்கப்பட்டுள்ளன.
கோவையில் போலீசார் கொடி அணிவகுப்பு
சந்தேகத்துக்குரிய நபர்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்” என்றார். கோவை மற்றும் பொள்ளாச்சியில் இந்து முன்னணி மற்றும் பாரதிய ஜனதா நிர்வாகிகளின் வாகனங்கள் உடைக்கப்பட்டன. இதையடுத்து போலீசார் சம்பவ பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.
செய்தியாளர் பி. ரஹ்மான்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil