கோவையில் டிராஃபிக் ஜாம் சமாளிப்பது இனி ஈஸி: புதிய செயலி அறிமுகம்
கோவையில் போக்குவரத்து நிலவரம் நெரிசல் மற்றும் மாற்று பாதைகள் குறித்து அறிந்து கொள்ளும் வகையிலான Road Ease என்ற செல்போன் செயலியை மாநகர காவல் ஆணையர் அறிமுகம் செய்து வைத்தார்.
கோவையில் போக்குவரத்து நிலவரம் நெரிசல் மற்றும் மாற்று பாதைகள் குறித்து அறிந்து கொள்ளும் வகையிலான Road Ease என்ற செல்போன் செயலியை மாநகர காவல் ஆணையர் அறிமுகம் செய்து வைத்தார்.
Advertisment
கோவையில் நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை மற்றும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்த வண்ணமே உள்ளன. இதனுடைய நகரின் பல்வேறு பகுதிகளில் மேம்பால பணிகள், சாலை கட்டமைப்பு மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதனால் அலுவலக நேரங்களில் நகரின் பல்வேறு பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கூகுள் மேப் செயலியில் போக்குவரத்து நிலவரங்கள் குறித்து போக்குவரத்து காவல்துறையினர் தகவல்களை அப்டேட் செய்யும் வகையில் roadEase என்ற செயலியை மாநகர காவல் ஆணையர் அறிமுகம் செய்து வைத்தார்.
எங்கெங்கு பணிகள் நடைபெறுகிறது எந்த பகுதியில் மாற்றுப் பாதையில் எடுக்க வேண்டும் என்பது குறித்து இதில் அறிந்து கொள்ளலாம்.
இந்த திட்டத்தின் படி காவல்துறையில் உள்ள போக்குவரத்து காவலர்களுக்கு இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் இது ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது கோவை மாநகர காவல் துறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
செயலி குறித்தும், அதன் பயன்பாடு குறித்தும், முகப்பு பக்கம் குறித்தும் மாநகர காவல்துறை ஆணையர் செய்தியாளர்கள் மத்தியில் விவரித்தார்.
நிகழ்ச்சியின் போது செயலி எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்தும் செய்முறை விளக்கம் காட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி: பி. ரகுமான் - கோவை மாவட்டம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"