ராஜன் என்பவர், கோவை பெரிய கடைவீதி காவல் நிலையத்திற்குள் இரவு 11 மணி அளவில் புகாரளிக்க வந்துள்ளார். அவர் முதல் தளத்தில் உள்ள உதவி ஆய்வாளர் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். காலையில் பணிக்கு போலீசார் வந்த போது, தூக்கு போட்ட நிலையில் சடலம் இருப்பது தெரியவந்துள்ளது. அந்த நபர் யார் என்பது குறித்தும், தற்கொலைக்கான காரணம் குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டார்கள்.
இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளிக்க கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "உதவி காவல் ஆய்வாளர் அறையில் தற்கொலை செய்த சம்பவம் யாருக்கும் தெரியவில்லை. காலையில் பணிக்கு வந்தவர்கள் அறையை திறந்து பார்த்து தான் தெரிகிறது. நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்பட்ட உள்ளது.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/08/06/coimbatore-police-commissioner-saravana-sundar-ips-2025-08-06-11-26-13.jpg)
உயிரிழந்த நபர் ராஜன் (60) பேரூர் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. உதவி ஆணையர் தலைமையில் விசாரணை மேற்கொள்ளபடும். பணியில் இருந்த காவலர்கள் விசாரணை நடத்தி, கவனக்குறைவாக இருந்தவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். காவல் நிலையத்தில நடைபெற்ற தற்கொலை தான் இது. லாக்கப் டெத் கிடையாது" என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பெரியகடைவீதி காவல் நிலைய தற்கொலை விவகாரத்தில் தலைமை காவலர் செந்தில்குமார் மற்றும் உதவி ஆய்வாளர் நாகராஜ் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது.