தமிழகம் முழுவதும் 63 காவல்துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்தும், 3 ஏ.டி.ஜி.பிக்கள் டி.ஜி.பிக்களாக பதவி உயர்வு செய்தும் தமிழக அரசு நேற்று(டிச.29) உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் படி, கன்னியாகுமரி, சிவகங்கை, தஞ்சை, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள எஸ்.பிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கோவையை பொறுத்தவரை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், துணை காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கோவை மாநகர காவல் ஆணையாளராக இருந்த பாலகிருஷ்ணன் மாற்றம் செய்யப்பட்டு புதிய மாநகர காவல் ஆணையாளராக சரவண சுந்தர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கோவை மாநகர காவல் ஆணையாளராக இருந்த பாலகிருஷ்ணன் சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கோவை சரக டி.ஐ.ஜியாக இருக்கும் சரவண சுந்தர் பதவி உயர்வு பெற்று கோவைக்கு புதிய மாநகர காவல் ஆணையாளராக நியமனம் செய்யப்பட்டார். மாநகர போலீஸ் துணை காவல்துறை அதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.