கோவை, சரவணம்பட்டி, கணபதி மாநகரை சேர்ந்தவர் புலனாய்வு பிரிவு தலைமை காவலர் பாலகுமார் (38). இவரது மனைவி தாஜ் குழும ஹோட்டல்களில் பணிபுரிந்து வருகிறார்.
அவர் பதவி உயர்வு பெற்று 15 நாட்களுக்கு முன்பு லண்டனில் உள்ள தாஜ் ஹோட்டலுக்கு அனுப்பப்பட்டார்.
அதனால் தனது இரண்டு குழந்தைகளையும் சேலத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் விட்டுச் சென்றார்.
இந்நிலையில் பாலகுமார் தனது மனைவியுடன் தொலைபேசியில் சண்டையிட்டதாகக் கூறப்படுகிறது. தேர்தல் பணியில் கலந்து கொண்ட அவர், கடந்த ஏப்ரல் 20ம் தேதி காலை வீட்டிற்கு திரும்பினார். சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் அவர் வேலைக்கு வராததால், அவரது பெற்றோரும் அவரை அணுக முடியவில்லை.
இதையடுத்து அவர்கள், சரவணம்பட்டி காவல் நிலையத்தைத் தொடர்பு கொண்டனர் அதனை தொடர்ந்து போலீஸார் நேற்று இரவு வீட்டிற்கு விரைந்தனர். அப்போது பாலகுமார் தூக்கில் தற்கொலை செய்து கொண்டதை கண்டறிந்துள்ளனர்.
பின்னர் அவரது உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“