கோவை க்யூ பிரான்ச் (Q Branch) காவல் ஆய்வாளரின் வாகன ஓட்டுநராக பணிபுரிந்து வருபவர் தலைமைக் காவலர் பார்த்திபன். இவர் தன் மனைவி, குழந்தைகளுடன் சின்னியம்பாளையம், ஆர்.ஜி. புதூர் பகுதியில் வசித்து வருகிறார். பார்த்திபன் மனைவி ரேவதி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இதனிடையே பார்த்திபன் நேற்று தன் மனைவியுடன் இரவு கொச்சின் புறவழிச் சாலையில் உணவருந்த சென்றிருந்தார். இரவு 12 மணியளவில் அவர் மனைவியுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது திடீரென அடையாளம் தெரியாத 3 நபர்கள் அவர்களை சுற்றி வளைந்து தடுத்து நிறுத்தியுள்ளனர். அவர்கள் பார்த்திதொடர்ந்து கண் இமைக்கும் நொடியில் அந்த மர்ம நபர்கள், தலைமை காவலர் பார்த்திபனை அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாக தாக்கி வெட்டி உள்ளனர். மேலும், அவர்களிடம் இருந்து தாலி செயின் மோதிரம் மற்றும் பிரேஸ்லெட் உள்ளிட்ட 5 சவரன் தங்க நகைகளை பறித்து சென்று விட்டனர். ஆள் நடமாட்டல் இல்லாத பகுதி என்பதால் பார்த்திபன் - ரேவதிக்கு உதவ யாரும் இல்லை.
சிறிது நேரத்தில் பார்த்திபன், காவல் உதவி எண்ணை தொடர்பு கொண்டு புகார் சொல்லியுள்ளார். அருகில் உள்ள தேசிய நெடுஞ்சாலை வரை அவரே சென்று, பிறகு அங்கிருந்து மற்ற வாகனங்களிடம் உதவி கேட்டு கோவை அரசு மருத்துவமனை சென்று சிகிச்சை பெற்றுள்ளார். மேல் சிகிச்சைக்காக பார்த்திபன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் கோவையில் அதிர்ச்சியையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சூலூர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.