கேரளா கொண்டு சென்ற ரூ. 22 லட்சம் பறிமுதல்: நகைக்கடை உரிமையாளரிடம் கோவை போலீஸ் விசாரணை

கோவை அருகே சோதனை சாவடியில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூபாய் 22 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக நகைக்கடை உரிமையாளரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை அருகே சோதனை சாவடியில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூபாய் 22 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக நகைக்கடை உரிமையாளரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

author-image
WebDesk
New Update
Coimbatore police seized Rs 22 lakhs took to Kerala question jewellery shop owner Tamil News

பணத்தைக் கொண்டு வந்தது, கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம் கேரளாசேரியை நபர் என்பது தெரியவந்தது.

கோவை, அடுத்த மதுக்கரை எட்டிமடை சோதனைச் சாவடியில் க.க.சாவடி காவல் துறையினர் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கோவையில் இருந்து கேரளாவை நோக்கி கார் ஒன்று வந்து கொண்டு இருந்தது. அதை சந்தேகத்தின் பேரில் காவல் துறையினர் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அதில் காருக்குள் ரூபாய் 22 லட்சம் கட்டு கட்டாக இருந்தது தெரிய வந்தது. 

Advertisment

இது பற்றி விசாரித்த போது பணத்தைக் கொண்டு வந்தது, கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம் கேரளாசேரியை நபர் என்பது தெரியவந்தது. அந்த காரில் அவரது குடும்பத்தினரும் அமர்ந்து இருந்தனர். காரில் வைக்கப்பட்டு இருந்த பணத்திற்கான ஆவணங்கள் எதுவும் இல்லை விசாரணையில் அவர் பாலக்காட்டில் நகைக்கடை வைத்து இருப்பதாகவும், பழைய நகைகளை கோவை ராஜ வீதியில் உள்ள கடைகளுக்கு விற்று விட்டு பணத்துடன் கேரளா திரும்பியதும் தெரியவந்தது. 

ஆனால் காரில் கொண்டு வந்த ரூபாய் 22 லட்சத்துக்கு எந்த வித ஆவணங்களும் இல்லாததால் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த பணத்தை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். கோவை அருகே சோதனை சாவடியில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் சென்ற ரூபாய் 22 லட்சம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Coimbatore

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: