/tamil-ie/media/media_files/uploads/2022/10/WhatsApp-Image-2022-10-20-at-2.15.07-PM-1.jpeg)
Coimbatore Police Twitter account hacked
கோவை மாநகர காவல் துறையின் ட்விட்டர் கணக்கை நேற்று இரவு ஹேக்கர்கள் முடக்கிய நிலையில் தற்போது ட்விட்டர் கணக்கு மீட்கப்பட்டது.
கோவை மாநகர காவல் துறையின் சார்பில் சமூகவலை தளப் பக்கங்கள் தனியாக பராமரிக்கப்பட்டு வருகிறது. அவற்றில் பல்வேறு விழிப்புணர்வு தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகள் குறித்து பதிவிடப்படுவது வழக்கம்.
/tamil-ie/media/media_files/uploads/2022/10/WhatsApp-Image-2022-10-20-at-2.15.07-PM.jpeg)
இந்நிலையில் நேற்று இரவு கோவை மாநகர காவல் துறையின் அதிகாரப்பூர்வ ட்வீட்டர் பக்கத்தை ஹேக்கர்கள் ஹேக் செய்தனர் என தகவல்கள் வெளியாகியது.
மேலும் அந்தப் பக்கத்தில் கிரிப்டோ கரன்சி குறித்த தகவல்களும், சம்பந்தம் இல்லாத உரையாடல்களும் இடம் பெற்றதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில், காவல் துறையின் ட்விட்டர் கணக்கு "ஹேக்" செய்யப்பட்ட நிலையில், கணக்கை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக காவல்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்து இருந்தனர்.
முடக்கப்பட்ட ட்விட்டர் பக்கத்தை மீட்க சைபர் கிரைம் பிரிவு போலீசார் நடவடிக்கைகள் எடுத்து வந்த நிலையில் தற்போது ட்விட்டர் கணக்கு மீட்கப்பட்டது. மேலும் அதிலிருந்த கிரிப்டோ கரன்சி குறித்த தகவல் பதிவுகளை நீக்கப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.