பள்ளிகள் திறக்கும் நாளில் மாணவ, மாணவிகளுக்கு நோட்டீஸ் வழங்கி விழிப்புணர்வு: கோவை போலீஸ் கமிஷனர் உறுதி
பள்ளி, கல்லூரிகள் திறக்கும் நாளில் மாணவர்களிடையே பாதுகாப்பு குறித்தும், பிரச்சனை என்றால் காவல்துறை அணுகுவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.
கோவை மாநகரில் உள்ள 14 காவல் நிலையங்களுக்கு இ-பீட் மற்றும் இதர பணிகளுக்காக தலா 3 டேப் கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கருவிகளை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் வழங்கினார். தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் அதிக வழக்குகள் பதிவாகும் காவல் நிலையங்களுக்கு இ-பீட் ரோந்து மற்றும் இதர பணிகளுக்காக டேப் (tab) வழங்கப்படுகிறது.
Advertisment
கோவை மாநகரில் 14 காவல் நிலைங்களுக்கு தலா 3 டேப்லெட்கள் தற்போது வழங்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆணையர் பாலகிருஷ்ணன், "தற்போது காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்களுக்கு இந்த டேப்கள் வழங்கப்பட்டுள்ளது. இதில் 3 செயலிகள் உள்ளன. அதன் மூலம் குற்றவாளிகளை கண்கணிக்கவும், சந்தேகப்படும் குற்றவாளிகளை உடனடியாக அடையாளம் காணவும் முடியும்.
அதே போல வேறு தனிப்பட்ட விஷயங்களுக்கு டேப் (tab) பயன்படுத்த முடியாது. கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ரவுண்டானாக்கள், யூ-டேன்கள் அமைப்பது மூலம் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
காற்று மாசுபாட்டில் இருந்து போக்குவரத்து காவலர்களை பாதுகாக்க உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. பள்ளிகள் திறக்கும் நாளில் அனைத்து பள்ளிகள் முன்பும் நோட்டீஸ்கள் வழங்கி "பிரச்சனை என்றால் அணுக வேண்டும்" என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளோம். கல்லூரிகளில் புத்தாக்கம் பயிற்சி நிகழ்ச்சிகளின் போதும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளன.
கோவை மாநகரில் கடந்த ஆண்டை விட 10 சதவீதம் விபத்துகள் குறைந்துள்ளன. சிக்னல் இல்லாமல் ரவுண்டாணாக்களாக மாற்றப்பட்டுள்ளது. இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. கல்லூரி மாணவர்களை குறி வைத்து போதைப் பொருள் விற்பனை செய்த கும்பலை பிடித்து விட்டோம். புதிய கும்பல்களை கண்கணிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது" என்று ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
செய்தி: பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“