/indian-express-tamil/media/media_files/dA4eOlSSsDnVKKeY1VQJ.jpg)
Coimbatore
பொள்ளாச்சி அடுத்த நவமலை வனப்பகுதியில் காட்டு யானைக் கூட்டம் சாலைகளில் உலா வருவதால் வனத்துறையினர் சுற்றுலா பயணிகள் செல்ல தடைவித்துள்ளனர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது பொள்ளாச்சி ஆனைமலை, வால்பாறை உள்ளிட்ட இடங்களில் பரவலாக அதிக கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது.
கோடை காலத்தின் போது உணவு மற்றும் தண்ணீருக்காக ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருந்து வனவிலங்குகள் வெளியேறி சாலைகளில் உலா வந்தன.
பொள்ளாச்சி அடுத்த நவமலை வனப்பகுதியில் காட்டு யானைக் கூட்டம் சாலைகளில் உலா வருவதால் வனத்துறையினர், இருசக்கர வாகனங்களில் சுற்றுலா பயணிகள் செல்ல தற்போது தடைவித்துள்ளனர்
— Indian Express Tamil (@IeTamil) June 27, 2024
பொது போக்குவரத்தை மட்டுமே பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தல்#Pollachipic.twitter.com/tMrRKiLuti
தற்போது நல்ல மழை பெய்து ரம்மியமான சூழல் நிலவுவதாலும், அடர் காட்டின் நடுவே கொசுக்களின் தொல்லையிலிருந்து தப்பிக்கவும் வனவிலங்குகள் காட்டை விட்டு வெளியேறி பொதுமக்கள் பயணிக்கும் சாலைகள் உலா வருகின்றனர்.
நவமலை செல்லும் வனப்பாதையில் காட்டு யானை கூட்டம் குட்டிகளுடன் உலா வருகிறது.
இதனை காண சுற்றுலாப் பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
காட்டு யானை கூட்டம் சாலைகளில் உலா வருவதால் வனத்துறையினர் இருசக்கர வாகனங்களில் சுற்றுலா பயணிகள் செல்ல தற்போது தடைவித்துள்ளனர்.
மேலும் யானை கூட்டம் இடம்பெயரும் வரை பொது போக்குவரத்தை மட்டுமே பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பயன்படுத்த வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.