கோவை டவுன்ஹால் புற காவல் நிலையத்திற்கு முன்பு உள்ள பூம்புகார் விற்பனை நிலையத்தில், பூட்டை உடைத்து ரூ.1.44 லட்ச பணத்தை மர்ம நபர் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை டவுன்ஹால் பகுதியில் தமிழ்நாடு கைவினைப் பொருட்கள் அங்காடியின் பூம்புகார் விற்பனையகம் இயங்கி வருகிறது.
வழக்கம் போல் இரவு விற்பனை நிலையத்தை பூட்டிவிட்டு சென்ற மேலாளர் ஆனந்தன் மறுநாள் திறப்பதற்கு வரும் போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பிறகு சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து பார்த்தபோது மர்ம நபர் ஒருவர் பூட்டை ரம்பத்தால் அறுத்து கண்ணாடியை உடைத்துக் கொண்டு உள்ளே வருவதும், கடையில் இருந்த ரூபாய் 1,44,877 பணத்தை கொள்ளையடித்து சென்றதும் தெரியவந்தது.
ஆனந்தன் இந்த கொள்ளை சம்பவம் குறித்து உக்கடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் உக்கடம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சி.சி.டி.வி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
எப்போதும் பரபரப்பாக காணப்படும் டவுன்ஹால் பகுதியில் 24 மணி நேரமும் செயல்படும் புற காவல் நிலையத்திற்கு முன்பு இந்த கொள்ளை சம்பவம் நடந்திருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“