கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியை அடுத்த செம்மாண்டம் பாளையம் பகுதியைச் சேர்ந்த தம்பதி
வையாபுரி- வசந்தி. இவர்களது 3-வது மகள் தேவதர்ஷினி சூலூர் கண்ணம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் முதலாம் ஆண்டு பயின்று வருகிறார்.
இந்த நிலையில் நேற்று (டிச.11) காலை சுமார் 7 மணியளவில் வழக்கம் போல் கல்லூரிக்கு செல்ல பேருந்து நிறுத்தத்திற்கு வீட்டில் இருந்து நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது சோமனூரில் இருந்து திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து வளைவில் அதிவேகமாக திரும்பியபோது, மாணவி தேவதர்ஷினி மீது மோதியதில் அவர் சாலையோரமிருந்த புதரில் விழுந்தார்.
இதில் காயமடைந்த தேவதர்ஷினியை அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு சூலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தேவதர்ஷினியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த கருமத்தம்பட்டி போலீசார், பேருந்தை பறிமுதல் செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.
இந்த நிலையில் அதிவேகமாக வந்த தனியார் பேருந்து மாணவி தேவதர்ஷினியின் மீது மோதும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த மாதம் இந்த தனியார் பேருந்து இதே இடத்தில் விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“