கோவையில் அதிகமான தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது பொதுமக்கள் தங்கள் பேருந்துகளில் பயணிகளை வரவழைக்க தனியார் பேருந்து உரிமையாளர்கள் பேருந்தில் க்யூ.ஆர் கோடு அமைத்துள்ளனர். இது பொது மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.
Advertisment
பேருந்தில் அடிக்கடி பொதுமக்கள் மற்றும் நடத்துனர் இடையே சில்லறை பிரச்சினை ஏற்படுவது வழக்கமாக உள்ளது. இதனை தடுக்க கோவையில் தனியார் பேருந்து உரிமையாளர்கள் இந்த க்யூ.ஆர் ("QR CODE") கோடு வசதியை பேருந்தில் அமைத்துள்ளனர்.
மேலும் பேருந்தில் பயணம் செய்யும் பொதுமக்கள் இந்த "க்யூ.ஆர் கோடு" மூலம் ஸ்கேன் செய்து பணத்தை அனுப்பி டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம் என பேருந்து நடத்துனர்கள் தெரிவிக்கின்றனர்.
செய்தி: பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“