Advertisment

வாட்ஸ்அப் குரூப் மூலம் வெளிநாட்டு பெண்களை வைத்து விபச்சாரம்: கோவையில் இரண்டு புரோக்கர்கள் கைது

கோவை மாநகரில் நட்சத்திர ஹோட்டல்களில் வெளிநாட்டு பெண்களை வைத்து விபச்சாரம் நடப்பதாக கோவை மாநகர காவல்துறைக்கு புகார்கள் வந்தன.

author-image
WebDesk
New Update
Coimbatore

Coimbatore

கோவையில் வாட்ஸ் அப் குரூப் மூலம் வெளிநாட்டு பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய இரண்டு புரோக்கர்களை, கோவை தனிப்படை போலீசார் கைது செய்தனர். 

Advertisment

கோவை மாநகரில் நட்சத்திர ஹோட்டல்களில் வெளிநாட்டு பெண்களை வைத்து விபச்சாரம் நடப்பதாக கோவை மாநகர காவல்துறைக்கு புகார்கள் வந்தன.

இதனை தொடர்ந்து விசாரணையில் களமிறங்கிய கோவை தனிப்படை காவல்துறையினர், மேற்கு வங்கத்தில் பதுங்கி இருந்த விபச்சார தொழிலின் மூளையாக செயல்பட்ட சிக்கந்தர் பாதுஷா (41), ஏஜெண்ட் ஸ்டீபன் ராஜ் (30) இருவரையும் கைது செய்தனர்.           

அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், ல் இந்தியா ஏஜென்ட் குருப் என்ற வாட்ஸ் அப் குரூப் மூலம் இந்தியா, ரஷ்யா, இந்தோனேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளிலுள்ள ஏஜென்ட்கள் மூலம்  விபச்சார தொழில் செய்வது தெரியவந்தது.

தொடர்ந்து கோவையில் உள்ள முக்கியமான 8 நட்சத்திர ஹோட்டல்களில் நீண்ட நாட்கள் தங்கி இருந்தவர்கள் மற்றும் வந்து சென்றவர்கள் குறித்து தகவல்கள் சேகரிக்கப்பட்டது. இதன் அடிப்படையில்  விபச்சாரத்தில் ஈடுபட்ட 15 பெண்கள் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்னர்.

வாட்ஸ் அப் குரூப் மூலம் விபச்சாரத் தொழில் செய்த நபர்களிடமிருந்து 10 சிம்கார்டுகள், 16 செல்போன்கள், 7 வங்கி  கணக்கு புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Coimbatore

இதுகுறித்து மாநகர காவல் துறையின் துணை (வடக்கு) ஆணையர் ஸ்டாலின் கூறுகையில், ‘வெளிநாட்டு பெண்களை வைத்து விபச்சாரத் தொழிலை செய்து வந்த கபீர் சிங் என்ற முக்கிய குற்றவாளியை தேடி வருகிறோம். இந்தியா முழுவதும் ஏஜென்ட்களாக செயல்பட்டு வரும் 117 நபர்களை பிடிக்க 12 பேர் கொண்ட நான்கு தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

சிக்கந்தர் பாதுஷா மீது கடந்த 2015 ஆம் ஆண்டில் இருந்து இதுவரை 13 வழக்குகள், கோவையில் மட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர் மீது பதிவு செய்யப்பட்ட விபச்சார குற்ற வழக்குகளில் இன்னும் கைது செய்யப்படவில்லை. பிணையில் வரமுடியாத பிடிவாரண்டு பிறபிக்கப்பட்டும் நிலுவையில் உள்ளது.

சிக்கந்தர் விபச்சாரத்தில் கிடைத்த லாப பணத்தில் பெங்களூரில் பிரியாணி கடை நடத்தி வருகிறார். ஹோட்டல்கள் மீதும் நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும், குற்றவாளிகள் இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும், துணை (வடக்கு) ஆணையர் ஸ்டாலின் தெரிவித்தார்.

செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Coimbatore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment