Coimbatore: பஞ்சாப் மாநிலம் பதிண்டா நகரத்தில் உள்ள ராணுவ தளத்தில் இரு தினங்களுக்கு முன் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 4 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். உயிரிழந்த வீரர்களில் 2 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். ஒருவர் தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்த யோகேஷ் குமார், மற்றொருவர் சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதியை சேர்ந்த கமலேஷ்.
இந்நிலையில், உயிரிழந்த இராணுவ வீரர் கமலேஷின் பூத உடல் விமானம் மூலம் கோவை கொண்டு வரப்பட்டது. இதனையடுத்து, அவரது உடலுக்கு இராணுவ வீரர்கள் மலர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அமரர் ஊர்தி மூலம் கமலேஷின் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்படது.
#VIDEO || பஞ்சாப் துப்பாக்கி சூடு: கோவை வந்தடைந்த ராணுவ வீரரின் உடலுக்கு மலரஞ்சலி!https://t.co/gkgoZMIuaK | #Coimbatore | #Punjab pic.twitter.com/hEK1XeqchU
— Indian Express Tamil (@IeTamil) April 14, 2023
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil