/indian-express-tamil/media/media_files/WUuPcvAbMaumTA6VgqF8.jpg)
கோவையில் பெய்த கனமழையால் வேளாண் பல்கலைக்கழகம் வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது
கோவை, வடவள்ளி லாலி ரோடு பகுதியில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகம் உள்ளது. இங்கு ஆயிரக் கணக்கான மாணவ - மாணவியர்கள் பயின்று வருகின்றனர். பல்கலைக் கழகம் அமைந்துள்ள சாலை மருதமலை செல்லுகின்ற முக்கிய சாலையாகவும் உள்ளது. இந்த சாலையை, நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில், இந்த முக்கிய சாலையில் கடந்த சில நாட்களாக பெய்த கன மழையின் காரணமாக மழை நீர் சாலையில் தேங்கி உள்ளது. மேலும் அங்குள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தில் நேற்று அதிகபட்சமாக 6.86 சென்டி மீட்டர் மழை பதிவான நிலையில், வளாகத்திற்குள் மழை நீர் புகுந்தது.
இதேபோல், பல்கலைக் கழகத்தின் உழவர் நலத் துறை ஆய்வகங்களில் மழைநீர் புகுந்துள்ளது. இந்த மழை நீர் சாலை முழுவதும் தேங்கி உள்ளதால், வாகன ஓட்டிகள் வெள்ளத்தில் தத்தளித்து வாகனத்தை சிரமத்துடன் ஓட்டி கடந்து செல்கின்றனர். தண்ணீர் வெளியேற அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வெளுத்து வாங்கிய கனமழை: தண்ணீரில் தத்தளிக்கும் கோவை வேளாண் பல்கலைக் கழகம் - வீடியோ!https://t.co/gkgoZMHWlc | #CoimbatoreRains | #TNRains | 📹 @rahman14331pic.twitter.com/hlHf5qM08g
— Indian Express Tamil (@IeTamil) October 15, 2024
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.