Advertisment

கோவையில் கனமழை: கலெக்டர் அலுவல வாகன மேற்கூரை விழுந்து விபத்து; அரசு ஊழியர்கள், செய்தியாளர்கள் டூவிலர் சேதம்

கோவையில் பெய்து வரும் கன மழையால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருசக்கர வாகனம் நிறுத்துமிட மேற்கூரை விழுந்து விபத்துக்குள்ளாகியதில் அரசு ஊழியர்கள் மற்றும் செய்தியாளர்களின் இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தது.

author-image
WebDesk
New Update
Coimbatore rain Collectors office vehicle parking roof falls bikes damaged Tamil News

கோவையில் கோடை மழை குளிர்ச்சியை ஏற்படுத்தினாலும் ஓரிரு இடங்களில் பெய்த மழை வாகன ஓட்டிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தியது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்.

Advertisment

Coimbatore: தமிழகத்தில் கோடை வெயில் தணிந்து கோடை மழை தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் கன மழையும் சில மாவட்டங்களில் பரவலாக மிதமான மழையும் பெய்து வருகிறது. 

இந்நிலையில், கோவையிலும் கடந்த ஒரு வார காலமாக மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நாளொன்றுக்கு சுமார் ஒரு மணி நேரத்தில் இருந்து இரண்டு மணி நேரம் வரை மிதமான மழையும் ஒரு சில இடங்களில் தொடர்ந்து சாரல் மழையும் பெய்து வருகிறது.

அதன் தொடர்ச்சியாக, இன்றும் (சனிக்கிழமை) கோவை மாநகருக்கு உட்பட்ட சிங்காநல்லூர், புலியகுளம், இடையர்பாளையம், கவுண்டம்பாளையம், ஹோப்ஸ் உட்பட பல்வேறு பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பரவலாக மழை பெய்தது. 

கோடை வெயில் காரணமாக மக்கள் அவதிக்கு உள்ளான நிலையில் தற்போது பெய்து வரும் கோடை மழை குளிர்ச்சியை ஏற்படுத்தினாலும் ஓரிரு இடங்களில் பெய்த மழை வாகன ஓட்டிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தியது.

குறிப்பாக கவுண்டம்பாளையம் பகுதியில் பெய்த மழையினால் சாலைகளில் மழை நீர் தேங்கி அனைத்து வாகனங்களும் பாதி அளவுக்கு நீருக்குள் மூழ்கின. மேலும் அப்பகுதியில் சென்ற வாகனக் ஓட்டிகளும் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

மேற்கூரை விழுந்து விபத்து 

இந்நிலையில் இன்று பெய்து கொண்டு உள்ள மழையின் காரணமாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் அமைக்கப்பட்டு உள்ள இரும்பினால் ஆன மேற்கூரை திடீரென சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த அரசு ஊழியர்கள் மற்றும் செய்தியாளர்களின் ஐந்து இருசக்கர வாகனம் சேதம் அடைந்து உள்ளது. 

மேலும் அப்பகுதியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க வரும் பொதுமக்கள், அரசு ஊழியர்கள் மற்றும் செய்தியாளர்கள் அப்பகுதியில் நிற்பது வழக்கம். அதிர்ஷ்டவசமாக அந்த பகுதியில் யாரும் நிற்கவில்லை இதனால் உயிர் சேதம் போன்ற பாதிப்புகள் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Coimbatore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment