கோவை மற்றும் சிறுவாணி நீர் பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாட்களாகப் பெய்துவரும் பருவமழையால், கோவை மக்களின் முக்கிய நதியான நொய்யலாற்றில் நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க தலைமை நிலையச் செயலாளருமான எஸ்.பி. வேலுமணி, தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தென்னமநல்லூர் பகுதியில் பொங்கிப் பெருகி வரும் நொய்யல் ஆற்று நீரை மலர் தூவி வரவேற்றார்.
அவர் பேரூர் படித்துறை, சித்திரை சாவடி தடுப்பணை, காளவாய் தடுப்பணை ஆகிய பகுதிகளிலும் நீர்வரத்து அதிகரித்திருப்பதை ஆய்வு செய்தார். மேலும், கரையோரப் பகுதி மக்களை அதிக எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுரை வழங்கினார்.