New Update
/tamil-ie/media/media_files/uploads/2022/09/tamil-indian-express-2022-09-02T125546.829.jpg)
Coimbatore government bus
Coimbatore government bus
Coimbatore News in Tamil: கோவை மாவட்டம் அன்னூரில் இருந்து கோவில்பாளையம் வழியாக காந்திபுரத்திற்கு 45-சி என்ற அரசுப்பேருந்து இயங்கி வருகிறது. இந்த பேருந்தில் பள்ளி மாணவ, மாணவிகள், பெண்கள் உள்ளிட்டோர் அதிகளவில் பயணம் செய்து வருகிறார்கள்
இந்நிலையில், இந்த பேருந்து நேற்றிரவு பெய்த கனமழையில் கோவை காந்திபுரத்தில் இருந்து அன்னூர் நோக்கி வந்து கொண்டு இருந்துள்ளது. அப்போது கனமழை பெய்து கொண்டு இருந்துள்ளது. இதனால் பேருந்திற்குள்ளும் மழைநீர் கொட்டத் துவங்கியுள்ளது.
இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் முழுவதும் மழைநீரில் பேருந்திற்குள் கொட்டிய மழைநீரில் நனைந்தபடியே பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனை அப்பேருந்தில் பயணம் செய்த பயணி ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. தொடர் மழை பெய்து வருவதால் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் தகவல் கோரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
#WATCH || கோவை: அரசுப்பேருந்திற்குள் கொட்டும் மழை; பயணிகள் கடும் அவதி!https://t.co/gkgoZMqkWC | #Coimbatore | 📹 @rahman14331 pic.twitter.com/Az5cqLHXv2
— Indian Express Tamil (@IeTamil) September 2, 2022
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.