தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து தொடர்மழை பெய்து வருவதால் பழுதடைந்த கூரை வீடுகள், மண்சுவர் வீடுகள், சிதிலமடைந்த கட்டடங்கள் மற்றும் தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளில் வசித்து வரும் பொது மக்கள், மழையினால் ஏற்படும் பாதிப்பினை கருத்தில் கொண்டு பாதுகாப்பான இடத்திற்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் வெள்ளபெருக்கு அபாயம் உள்ளதால் பொதுமக்கள் நீர்நிலைகளுக்கு குளிக்கவோ, சுயபடம் எடுக்கவோ அருகில் செல்ல வேண்டாம் என்று கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கோவையில் நேற்று மாலை பெய்த கன மழையால் ராமநாதபுரம் சிக்னல் அருகே ரோட்டில் மழை நீர் குளம் போல தேங்கி இருந்தது.
அப்போது பணியில் இருந்த ராமநாதபுரம் போக்குவரத்து பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் அன்பழகன் மற்றும் முருகசாமி இருவரும் சேர்ந்து சாலையில் தேங்கியிருந்த நீரை அகற்றுவதற்கு முயற்சி செய்தனர்.
/indian-express-tamil/media/media_files/os889RBuTyU1ahIAQYbQ.jpeg)
இதனால் ஓரளவு தேங்கி இருந்த நீர் கால்வாயில் வழிந்து ஓடியது.
இந்த நிகழ்வு அந்த வழியாக சென்ற பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.
சாலையில் வெள்ளநீரை அகற்ற முயன்ற போலீசாரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
இருவரது பணியை பெருமளவில் பாராட்டினார்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“