கோவை சரவணம்பட்டி துடியலூர் சாலையில் விமானப்படைக்கு சொந்தமான ராமன் விகார் குடியிருப்பு உள்ளது. இங்கு 400 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் இங்கு குடியிருக்கும் பிரசாந்த் ரெட்டி என்பவரின் மகன் ஜியானஸ் ரெட்டி (4) மற்றும் பாலசுந்தர் என்பவரின் மகள் வியோமா ஆகியோர் குடியிருப்புக்கு சொந்தமான பூங்காவில் விளையாடிய போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.
இதையடுத்து சம்பந்தபட்ட பூங்காவில், மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதிகாரிகள், குடியிருப்போர் நல சங்கத்தினரின் அஜாக்கிரதை காரணமாகவே விபத்து ஏற்பட்டுள்ளது. குடியிருப்பு வளாகத்தில் குழந்தைகள் பூங்காவை மேம்படுத்தி இருக்கின்றனர்.
பூங்காவை மேம்படுத்தும் போது பூங்காவின் கீழே மின் கேபிள் ஒரு அடி ஆழத்தில் போட்டு இருக்கின்றனர். தெருவிளக்கு ஆன் செய்யும் பொழுது மின்சாரம் பாய்ந்து குழந்தைகள் இறந்திருக்கின்றனர்.
இந்த இடம் மின்வாரிய பொறுப்பு கிடையாது அவர்களின் பாதுகாப்பு குறைபாடு காரணமாகவே விபத்து ஏற்பட்டுள்ளது. தெருவிளக்கை அவர்கள் தான் பராமரித்து வருகின்றனர்.
விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டதால் ஆய்வு செய்ய வந்ததாகவும் இதை அறிக்கையாக தங்களது துறை உயர்அதிகாரிகளுக்கு தெரிவிக்க இருப்பதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி: பி.ரஹ்மான்: கோவை மாவட்டம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“