scorecardresearch

கோவை: காட்டு யானையிடம் உயிர் தப்பிய ஓய்வு பெற்ற ஆசிரியர் – சி.சி.டி.வி வீடியோ

கோவையில் யானையிடம் இருந்து ஓய்வு பெற்ற ஆசிரியர் தப்பிய பரபரப்பு சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகியுள்ளது.

Coimbatore: Retired Teacher Escapes Wild Elephant - CCTV Video Tamil News
Retired Teacher Escapes from Wild Elephant near Coimbatore, CCTV Video Tamil News

Coimbatore News in Tamil: கோவை துடியலூரை அடுத்த வரப்பாளையம் பொண்ணூத்து மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்து உள்ளது. கேரளா ஒட்டியுள்ள வனப் பகுதியில் நாள்தோறும் தண்ணீர், உணவு தேடி வரும் வன விலங்குகள், யானைகள் ஊருக்குள் வளர்வது வருவது வழக்கம்.

இந்நிலையில் இன்று காலை வரப்பாளையம் கிராமத்தில் காட்டு யானைகள் புகுந்ததாக அப்பகுதி விவசாயிகளுக்கு தகவல் கிடைத்தது. யானைகள் ஊருக்கு புகுந்ததை கேள்விப்பட்ட விவசாயி ஓய்வு பெற்ற ஆசிரியர் ராமசாமி தனது தோட்டத்தில் சோளம் பயிரிடப்பட்டு உள்ளதால் அதனை பாதுகாக்க மின்வெளி அமைக்கப்பட்டு இருந்த நிலையில் அது செயல்படுகிறதா ? என்று தெரிந்து கொள்ள வீட்டின் முன்பு வந்து பார்த்துக் கொண்டு உள்ளார்.

அப்போது, அவர் எதிர்பாராத போது திடீரென அங்கு வந்த ஒற்றை காட்டு யானை ராமசாமியை தாக்க வந்துள்ளது. இதனால் நிலைகுலைந்த ராமசாமி அந்த யானையிடம் இருந்து தப்பி ஓடி வந்து உள்ளார். இதனைத் தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் பட்டாசு வெடித்து அந்த யானையை விரட்டி உள்ளனர். இந்த சி.சி.டி.வி காட்சிகள் தற்போது வெளியாகி அப்பகுதி மக்களிடையே அச்சத்தையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Coimbatore retired teacher escapes wild elephant cctv video tamil news